Tamil News Mappillai Samba Rice Kanji SECVPF
ஆரோக்கிய உணவு

சுவையான மாப்பிள்ளை சம்பா மோர் கஞ்சி

தேவையான பொருட்கள் :

மாப்பிள்ளை சம்பா அரிசி – 100 கிராம்,

தண்ணீர் – 100 மில்லி,
மோர் – 50 மில்லி,
சின்ன வெங்காயம் – 8 ,
பச்சை மிளகாய் – ஒன்று ,
கறிவேப்பிலை – சிறிதளவு,
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
கடுகு – அரை டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

சின்ன வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மாப்பிள்ளை சம்பா அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்த பிறகு மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

ஒரு வாணலியில் அரைத்த மாப்பிள்ளை அரிசி, தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு வேகவைத்துக் கொள்ளவும்.

பின் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து வேகவைத்த கஞ்சியில் ஊற்றவும்.

நன்கு ஆறியபின் மோர் சேர்த்து பரிமாறவும்.

சூப்பரான மாப்பிள்ளை சம்பா மோர் கஞ்சி ரெடி.

Courtesy: MalaiMalar

Related posts

உங்களுக்கு தெரியுமா காலையில் சாப்பிடுவதற்கு ஏற்ற மிகவும் சிறப்பான பழங்கள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா பல நோய்களை குணப்படுத்தும் முருங்கை விதைகள்..!

nathan

கொழுப்பைக் குறைக்கும் தேநீர் வகைகள்

nathan

அடிக்கடி கறிவேப்பிலை துவையல் செய்து, சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டு வந்தால்

nathan

ஒரு மாதம் கருணைக்கிழங்கு சாப்பிட்டால் கிடைக்கும் தீர்வு!

nathan

மருந்து போல் குணப்படுத்தும் உருளைக்கிழங்கு

nathan

சுவையான கருப்பு சுண்டல் ரெசிபி

nathan

சளிக்கு இதமாக இருக்கும் சுக்கு மல்லி காபி

nathan

இந்த ஒரு ஜாக்கிரதை…! மருத்துவ பொருளை அதிகம் சாப்பிட்டால் பேராபத்து! யாரெல்லாம் சாப்பிட கூடாது?

nathan