25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
201703281346484796 Say goodbye to the women health problem Foods SECVPF 1
ஆரோக்கிய உணவு

வெள்ளைப்படுத்தல் பிரச்சனைக்கு குட்பை சொல்லும் உணவுகள்

வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு ஆரம்பத்திலேயே சில உணவுப்பொருட்களின் மூலமாகவே அதிகமாகாமல் குணப்படுத்த முடியும். அந்த உணவுகள் என்னவென்று பார்க்கலாம்.

வெள்ளைப்படுத்தல் பிரச்சனைக்கு குட்பை சொல்லும் உணவுகள்
எல்லா பெண்களுக்குமே வெள்ளைப்படுதல் குறித்த அனுபவம் நிச்சயம் இருக்கும். எல்லோருக்குமே வெள்ளைப்படுதல் உண்டாகும். அது இயல்பான ஒன்று தான். ஆனால், அதன் அளவு அதிகரிக்கும்போது தான் உடலில் பல பிரச்சனைகள் உண்டாகின்றன. அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், பிரச்சனைகள் அதிகமாகி, மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உண்டாகும். ஆனால் அதற்கு அவசியமில்லாமல் ஆரம்பத்திலேயே சில உணவுப்பொருட்களின் மூலமாகவே, வெள்ளைப்படுதல் அதிகமாகாமல் குணப்படுத்த முடியும்.

வெந்தயம் பிஎச் அளவை அதிகரிக்கச் செய்யும். ஒரு ஸ்பூன் வெந்தயத்தைத் தண்ணீர் ஊற்றி இரவு முழுக்க ஊறவைக்க வேண்டும். காலையில் எழுந்ததும் அந்த தண்ணீரை வடிகட்டி, ஒரு ஸ்பூன் தேன் கலந்து, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

தினமும் ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால், அதிக அளவிலான வெள்ளைப்படுதல் சரியாகும். ஜீரணக் கோளாறுகளும் உங்களை நெருங்கவே முடியாது.

201703281346484796 Say goodbye to the women health problem Foods SECVPF

ஒரு ஸ்பூன் இஞ்சிப் பொடியை இரண்டு டம்ளர் தண்ணீரில் போட்டு, கொதிக்க வேண்டும். அது ஒரு டம்ளராக குறையும் வரை கொதிக்க விட்டு, பின்னர் வடிகட்டி குடித்தால், வெள்ளைப்படுதல் பிரச்சனையை மிக விரைவாகத் தீர்க்க முடியும்.

பத்து கெய்யா இலைகளை எடுத்து தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். 10 முதல் 15 நிமிடங்கள் வரை நன்கு கொதித்தபின் வடிகட்டி, குளிர வைக்கவும். அந்த தண்ணீரைக் கொண்டு, பிறப்புறுப்பைக் கழுவினாலும் வெள்ளைப்படுதல் குறையும்.

தினமும் ஒரு கிளாஸ் மாதுளை ஜூஸ் குடித்து வருவது கருப்பையை ஆரோக்கியமாக வைத்திருக்கும். அதோடு, ஒரு கைப்பிடியளவு மாதுளை இலைகளை அரைத்து இரண்டு கிளாஸ் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொண்டு, அதனுடன் மிளகுப்பொடியைச் சேர்த்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை குடித்து வரவும்.

4 வெண்டைக்காயை எடுத்துக் கொண்டு, அரை லிட்டர் தண்ணீரில் போட்டு, 15 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும். அதை வடிகட்டி, குடித்து வர வெள்ளைப்படுதல் நிற்கும். வெண்டைக்காய் வேக வைத்த தண்ணீர் மிகவும் வழவழப்பாக இருக்குமாதலால், சிறிதளவு தேன் சேர்த்துக் கொள்ளலாம்.

Related posts

வீட்டில் போடும் சாம்பிராணியில் இந்த பொருள்களை சேர்ப்பதால் உண்டாகும் பலன்கள் என்ன தெரியுமா?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

பெண்களே தெரிந்துகொள்ளுங்கள்! கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிட வேண்டிய சில சைவ உணவுகள்!!!

nathan

சப்போட்டா பழத்தில் உள்ள சத்துகள்

nathan

சுவையான கேரளா ஸ்பெஷல் ஆப்பம் : மிருதுவாக இருக்க உதவும் சில டிப்ஸ்!!!

nathan

மாம்பழம் அதிகமாக சாப்பிட்டால் ஆபத்தா? தெரிஞ்சிக்கங்க…

nathan

ஆரோக்கியத்தை மேம்படுத்த.. தினமும் காலை வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் நெய் சாப்பிட்டா எவ்வளவு நன்மை கிடைக்கும் தெரியுமா?

nathan

தெரிஞ்சிக்கங்க…வெந்நீர் குடித்தால் உணவுக்குழாய் பாதிக்குமா?

nathan

உடலில் சேரும் கொழுப்புக்களை உடைத்தெறியும் அற்புத உணவுப் பொருட்கள்!!!

nathan

ரத்த சோகையை குணமாக்கும் பேரீச்சம் பழம்

nathan