30.3 C
Chennai
Tuesday, May 21, 2024
cover1 12 1513046724
ஆரோக்கிய உணவு

அதிர்ச்சி தகவல்!! கடுகு எண்ணெய் நமது மூளையை பாதிக்கிறதா?

கடுகு எண்ணெய் நமது உடலுக்கு ஆரோக்கியமானது என்று இதனால் வரை நினைத்திருந்தோம். ஆனால் தற்போது நடத்திய புதிய ஆராய்ச்சியில் கடுகு எண்ணெய் பற்றிய ஒரு அதிர்ச்சி தகவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி படி பார்த்தால் தினமும் 2 டேபிள் ஸ்பூன் கடுகு எண்ணெய் சாப்பிட்டால் நினைவாற்றல், அறிந்து கொள்ளும் திறன், உடல் எடை அதிகரித்தல் மற்றும் அல்சீமர் நோய் போன்ற ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகிறதாம்.

கடுகு எண்ணெய் என்பது கடுகு விதைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. இந்த ஆராய்ச்சியில் கடுகு எண்ணெய்யை எலிக்கு கொடுத்து பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.அப்போது கடுகு எண்ணெய் உட்கொண்ட எலிகளின் எடை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த கடுகு எண்ணெய்யை சாதரணமாக ஆறு மாதங்கள் எடுத்து கொண்டால் கூட நினைவு இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் குறுகிய கால நினைவாற்றல், அறிந்து கொள்ளும் திறன் போன்றவை பாதிப்படைய வாய்ப்புள்ளது. இந்த எண்ணெய்யை நீண்ட நாட்களுக்கு எலிகளிடம் கொடுத்து பரிசோதித்த போது மூளையை பாதிக்கக் கூடிய அபாயம் உள்ளது தெரிய வந்துள்ளது.

எலியின் மூளையில் உள்ள அமிலாய்டு பீட்டா 1-40 செல்கள் குறையத் தொடங்கி உள்ளன. இந்த பீட்டா செல்கள் தான் அமிலாய்டு பீட்டா புரோட்டீன் செயலாக்கத்திற்கு உதவி புரிந்து மூளையை ஆரோக்கியமாக நினைவாற்றலுடன் வைத்திருக்க உதவுகிறது. இதுவே அமிலாய்டு பீட்டா 1-42 செல்கள் அதிகமாக இருந்தால் அது மூளைக்கு மிகவும் அபாயகரமானது. நமது மூளையில் உள்ள அமிலாய்டு பீட்டா 1-40 தான் பீட்டா 1-42 செல்களை நடுநிலையாக்குகிறது. இப்பொழுது பீட்டா 1-40 செல்களின் அளவு குறையும் போது மூளையில் பீட்டா 1-42 செல்களின் எண்ணிக்கை அதிகரித்து விடுகின்றன என்று டோமெனிகோ பிராக்டிகோ புரபொசர் டெம்புல் யுனிவர்சிட்டி ஆஃப் பெனிசுலவேனியாவிலிருந்து கூறுகிறார்.

மூளையில் தாக்கம் : மூளையில் ஏற்படும் மாற்றம் மூளையில் உள்ள நியூரான்களில் பாதிப்பையும், நியூரான்களுக்கிடையேயான சிக்னல் கடத்தலை குறைத்தல் மற்றும் எஇதுவே அல்சீமர் நோய்க்கு கொண்டு செல்கிறது. இதுவே அல்சீமர் நோயால் பாதிப்படைந்த எலிக்கு ஆலிவ் ஆயில் உணவு முறையை கொடுத்து பரிசோதித்த போது அமிலாய்டு செல்கள் பிரச்சினை மற்றும் பாஸ்போரிலேட்டேடு டவ் போன்றவற்றை குறைக்கிறது. மேலும் நினைவாற்றலையும் அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆராய்ச்சி பற்றிய தகவல் சைன்டிவிக் ரிப்போர்ட் என்ற நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இங்கே உங்களுக்காக மூளையை ஆரோக்கியமாக வைப்பதற்கான உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளன

அவகேடா அவகேடா ஒரு சிறந்த பழமாகும். இதில் அதிக அளவு கொழுப்பு உள்ளது. இது நமது மூளைக்கு மிகவும் சிறந்தது. மேலும் இவை இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

நட்ஸ் நட்ஸில் அதிக அளவில் ஓமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளன. எனவே ஒரு கைப்பிடி அளவு நட்ஸ் சாப்பிடுவது மூளைக்கு மிகவும் நல்லது. பாதாம் பருப்பு மற்றும் வால்நட்ஸ் போன்றவை மூளை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

பிராக்கோலி இதில் நிறைய நார்ச்சத்து, விட்டமின் கே, விட்டமின் சி, கொலைன் போன்ற பொருட்கள் அடங்கியுள்ளது. தினமும் பிராக்கோலியை உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல ஆரோக்கியமான மூளையை பெற முடியும். மேலும் இது கூர்மையான நினைவாற்றலையும் கொடுக்கும்.

டார்க் சாக்லேட் டார்க் சாக்லேட் டில் ப்ளோவோனோல் உள்ளது. இதில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருள் போன்றவை உள்ளன. எனவே இதை சரியான அளவில் எடுத்து கொண்டால் நமது மூளைக்கு நல்லது. இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. மேலும் மூளைக்கும் இதயத்திற்கும் இடையையான இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

தேங்காய் எண்ணெய் தேங்காய் எண்ணெய்யில் அழற்சி எதிர்ப்பு பொருள் உள்ளது. இது அழற்சி அல்லது பாதிப்பை உண்டு பண்ணும் செல்களை அழிக்கிறது. மேலும் இவை வயிற்றில் இருக்கும் கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கிறது. தினமும் குறிப்பிட்ட அளவு தேங்காய் எண்ணெய்யை உணவில் சேர்த்துக் கொண்டால் மூளை ஆரோக்கியமாக இருக்கும்.

cover1 12 1513046724

Related posts

தெரிஞ்சிக்கங்க…பால் குடிப்பதனால் தீமைகள் ஏற்படுமா?

nathan

நல்லெண்ணெயை சேர்த்து கொண்டால் இவ்வளவு நன்மைகளா?

nathan

உங்களுக்கு தெரியுமா பீநட் பட்டரின் ஆரோகிய நன்மைகள்!

nathan

உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இந்தக கலவை சிறந்ததாக இருக்கும்!…

sangika

வேகமான உலகத்தில் நேரத்தையும் சேமித்திட சில அதிமுக்கிய சமையலறை ரகசியங்கள்!!!

nathan

கிச்சன் கிளினிக் – உணவே விருந்து உணவே மருந்து

nathan

இன்றே சாப்பிடுங்கள்..!! பிஸ்தாவில் உள்ள பிரம்மதமான நன்மைகள்..!!

nathan

உங்கள் கவனத்துக்கு காலை உணவை புறக்கணிப்பதால் உண்டாகும் ஆபத்து என்ன தெரியுமா?

nathan

பருமனைக் குறைக்கும் பப்பாளி அடை! உணவே மருந்து!!

nathan