36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கிய உணவு

இனிப்பும் கசப்பும் கலந்த‌ பாகற்காய் குழம்பு

இனிப்பும் கசப்பும் கலந்த‌ பாகற்காய் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

இனிப்பும் கசப்பும் கலந்த‌ பாகற்காய் குழம்பு
தேவையான பொருட்கள் :

பாகற்காய் – 2
பெரிய வெங்காயம் – ஒன்று
உப்பு, கறிவேப்பிலை, எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி
புளி – ஒரு நெல்லிக்காய் அள்வு
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
வெல்லம் – 2 மேசைக்கரண்டி

வதக்கி அரைக்க :

தேங்காய் துருவல் – 3 மேசைக்கரண்டி
உளுந்து – ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு – ஒரு தேக்கரண்டி
மிளகு – ஒரு தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
மிளகாய் வற்றல் – 3
தனியா – ஒரு தேக்கரண்டி
சின்ன வெங்காயம் – 7
தக்காளி – ஒன்று
கறிவேப்பிலை – சிறிது

தாளிக்க:

கடுகு, வெந்தயம்

செய்முறை :

* பாகற்காயை வட்டமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

* வெங்காயத்தை மெல்லிதாக நீளவாக்கில் நறுக்கவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு, தனியா, மிளகாய் வற்றல் சேர்த்து சிவக்க வறுக்கவும்.

* அடுத்து அதில் நறுக்கிய சின்ன வெங்காயம், தேங்காய் துருவல், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, பின் தக்காளி சேர்த்து வதக்கவும். இந்த கலவையை ஆற வைத்து மிக்ஸியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நைசாக அரைக்கவும்.

* புளியை ஊற வைத்து கரைத்து வைக்கவும்.

* வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைக்கவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம் தாளித்து, அதில் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய பாகற்காய் சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் மற்றும் பாகற்காயுடன் அரைத்த மசாலா சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மூடி 10 நிமிடம் மிதமான தீயில் வேக விடவும்.

* பின்னர் அதில் புளிக்கரைசல் சேர்த்து எண்ணெய் பிரிய கொதிக்க விட்டு கடைசியாக வெல்லம் கலந்த நீர் ஊற்றி ஒரு கொதி விட்டு இறக்கவும்.

* இனிப்பும் கசப்பும் கலந்த‌ பாகற்காய் குழம்பு தயார்.

Related posts

சூப்பர் டிப்ஸ்! எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மிளகு ரசம்

nathan

மார்பக கட்டி குணமாக உணவு

nathan

ஆண்கள் கட்டாயம் இந்த 10 விஷயங்களுக்காக கற்றாழையை சாப்பிடவேண்டும் தெரியுமா?

nathan

உடல்நலத்திற்கு நல்லது என்ற பெயரில் சீனாவில் ஆல்கஹாலில் வயகாராவை கலந்து மதுவிற்பனை!!!

nathan

உங்களுக்கு தெரியுமா பனங்கற்கண்டு சாப்பிட்டா இந்த பிரச்சனையெல்லாம் பறந்து போய்விடுமாம்!

nathan

உங்களுக்கு தெரியுமா தினமும் இரவில் எலுமிச்சை மற்றும் தேன் கலந்த சீரக டீயைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

nathan

ரத்தத்தில் சேரும் சர்க்கரையை குறைக்கும் கீரை

nathan

தெரிஞ்சிக்கங்க… எலுமிச்சை ஜூஸில் கருப்பு உப்பு சேர்த்து குடித்தால் உடலில் என்னென்ன அற்புதமான நன்மைகள்.

nathan

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்

nathan