39.1 C
Chennai
Friday, May 31, 2024
Palm Candy 2
ஆரோக்கிய உணவு

பனங்கற்கண்டு சாப்பிடுவதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

சித்த மருத்துவத்தில் தயாரிக்கப்படும் அணைத்து மருந்துகளிலும் முக்கியமாக சேர்க்கப்படும் ஒரு பொருள் என்றால் அது பனங்கற்கண்டாகும்.கரும்பு மற்றும் பனை மரத்திலிருந்து தயாரிக்கப்படும் இந்த பனங்கற்கண்டில் விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் போன்றவை நிறைந்து காணப்படுகிறது.

பனங்கற்கண்டு வாத பித்தத்தை நீக்கி பசியை தூண்டுகிறது. முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு நிற வெல்லத்தை “கருப்பட்டி” என்பார்கள். இதை சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும் சர்க்கரை ‘பனங்கற்கண்டு’ எனப்படும்.இதில் இல்லாத மருத்துவ குணங்களே இல்லை.

 

கருவுற்ற பெண்கள் பனங்கற்கண்டு சாப்பிடுவதால் மலச்சிக்கல், வயிற்றுப் புண் முதலியவைகளை குணப்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. டைபாய்டு, சுரம், நீர்க்கட்டு முதலிய வியாதிகளை போக்குகின்ற நல்ல மருந்தாகவும் இது செயல்படுகிறது. இருதய நோய் குணமாகும். இருதயம் வலுவடையும்

 

பனங்கற்கண்டின் அற்புத மருத்துவ நன்மைகள்
பனங்கற்கண்டை வாயில் போட்டு அந்த உமிழ் நீரை முழுங்கினால் இதனால் சளி, இருமல் மற்றும் தொண்டைக் கரகரப்பு, போன்ற பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வுகள் கிடைக்கும்.

சிறிதளவு சீரகம் மற்றும் பனங்கற்கண்டை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் நீங்கி விடும்.
1/2 டேபிள் ஸ்பூன் பசு மாட்டு நெய்யுடன், சிறிதளவு பனங்கற்கண்டு மற்றும் நிலக்கடலை சேர்த்து சாப்பிட்டால், உடல் சோர்வுகள் நீங்கி, சுறுசுறுப்புத் தன்மை அதிகரிக்கும்.

2 பாதாம் பருப்பு, 1 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு, 1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூள் ஆகியவற்றை பொடி செய்து, அதை பாலுடன் கலந்து குடித்து வந்தால், தீராத சளி பிரச்சனைகள் உடனே குணமாகும்.

1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள், 1/2 டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து சாப்பிட்டால், தொண்டை வலி குணமாகும்.

சிறிதளவு பனங்கற்கண்டு, பாதாம் பருப்பு மற்றும் சீரகம் ஆகிய அனைத்தையும் சேர்த்து, இரவில் படுப்பதற்கு முன் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல், கண்பார்வை அதிகரிக்கும்.
பனங்கற்கண்டை பாதாம் மற்றும் மிளகுத் தூளுடன் சேர்த்து வாரத்திற்கு 2 முறை சாப்பிட்டு வந்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்களின் தாக்கத்தை தடுக்கலாம்.

2டேபிள் ஸ்பூன் வெங்காய ஜூஸ் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு ஆகியவற்றை சேர்த்து வாரத்திற்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தால், சிறுநீரகக் கற்கள் பிரச்சினை குணமாகும்..

பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி இளகும். முக்கியமாக தொண்டைப்புண் அகலும்.

பனங்கற்கண்டை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணம்,நீர் சுருக்கு, ஜுரத்தினால் ஏற்படும் வெப்பங்கள் குறையும்.
பனங்கற்கண்டில் இருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது.

Related posts

உங்களுக்கு தெரியுமா நுங்கில் இவ்வளவு சிறப்புகள் இருக்கா?

nathan

தெரிஞ்சிக்கங்க…பூண்டுடன் இதை மட்டும் சேர்த்து சாப்பிட்டால் என்ன நடக்கும்?

nathan

தெரிஞ்சிக்கங்க…அல்சரைப் போக்கும் சிவப்பு முட்டைக்கோஸ் பொரியல்

nathan

கேரட் உருளைக்கிழங்கு சூப்

nathan

சூப்பரான புடலங்காய் கூட்டு

nathan

உடல் குளிர்ச்சியாக வெந்தயத்தை இப்படி பயன்படுத்துங்கள்!….

sangika

உடல் எடையை குறைக்கும் கொள்ளு இட்லி

nathan

உடல் எடையை குறைக்க உணவுகளை இப்படி தான் சமைத்து சாப்பிட வேண்டும்!!!

nathan

தெரிஞ்சிக்கங்க பலாப்பழம் ஆரோக்கிய உணவுகளின் உலகில் ஆல்ரவுண்டர்..!!!

nathan