201703171526464722 how to make strawberry pancakes SECVPF
கேக் செய்முறை

குழந்தைகளுக்கான ஸ்ட்ராபெர்ரி பேன் கேக்

பேன் கேக்கை பேக்கரியில் தான் வாங்குவோம். ஆனால் இந்த பேன் கேக்கை செய்வது மிகவும் சுலபம். இன்று ஸ்ட்ராபெர்ரி பேன் கேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

குழந்தைகளுக்கான ஸ்ட்ராபெர்ரி பேன் கேக்
தேவைப்படும் பொருட்கள் :

மைதா மாவு – 1 கப்
சர்க்கரை – 2 ஸ்பூன்
பேக்கிங் பவுடர் – 1 தேக்கரண்டி
உப்பு – ஒரு சிட்டிகை
பால் – 1 1/4 கப்
பட்டர் – 3 தேக்கரண்டி
முட்டை – 1
ஸ்ட்ராபெர்ரி – 10

செய்முறை :

* பாலை நன்றாக காய்ச்சி ஆற விடவும்.

* முட்டையை நன்றாக அடித்து வைக்கவும்.

* 5 ஸ்ட்ராபெர்ரியை பொடியாகவும், 5 ஸ்ட்ராபெர்ரியை மெல்லிய துண்டுகளாகவும் வெட்டிக்கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சர்க்கரை, பேக்கிங் பவுடர், உப்பு ஆகியவற்றை போட்டு சேர்த்து கிளறவும்

* அடுத்து அதில் பால், பட்டர், முட்டை, பொடியாக நறுக்கிய ஸ்ட்ராபெர்ரி துண்டுகளை போட்டு நன்றாக அடித்துக் கொள்ளவும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் சிறிதளவு பட்டர் விட்டு ஒரு கரண்டி மாவை கலவையை தடியாக ஊற்றவும்.

* பின் அந்த மாவின் மேல் மெல்லிய துண்டுகளாக நறுக்கி ஸ்ட்ராபெர்ரி துண்டுகளை அடுக்கி இந்தக் கலவை நன்றாக வெந்ததும் திருப்பி போட்டு இறக்கிவிடவும்.

* சூப்பரான ஸ்ட்ராபெர்ரி பேன் கேக் ரெடி! 201703171526464722 how to make strawberry pancakes SECVPF

Related posts

முட்டையில்லாத ரிச் கேக்

nathan

ரிச்கேக் : செய்முறைகளுடன்…!

nathan

ஸ்பெஷல் பேரீச்சம்பழ கேக்

nathan

ஈஸி சாக்லேட் கேக் : செய்முறைகளுடன்…!

nathan

கோதுமை பிரெட் கேக்

nathan

பேக்டு அலாஸ்கா

nathan

சுவையான ஆரஞ்சு கேக்!…

sangika

கேரட் கேக் / Whole Wheat Carrot Cake

nathan

புரூட் கேக் செய்ய வேண்டுமா இதை படியுங்க…..

nathan