கேக் செய்முறை

ரிச்கேக் : செய்முறைகளுடன்…!

தேவையான பொருள்கள்:

ரவை – 1 கிலோ
சீனி – 2 கிலோ
முட்டை – 60
மாஜரீன் – 1 கிலோ
இஞ்சிப்பாகு – 900 கிராம்
பூசணி அல்வா – 900 கிராம்
செளசெள – 900 கிராம்
முந்திப்பருப்பு – 1500 கிராம்
உலர்ந்ததிராட்சை – 2 கிலோ
பேரீச்சம்பழம் – 2 கிலோ
பிராண்டி – 2 கிலாஸ் [வைன் கிலாஸ்]கண்டிபீல்(candi peel) – 500 கிராம்
செரீஸ்(cheris) – 500 கிராம்
தேன் – 250 கிராம்
கோல்டன் சிராப்(Golden sirop) – 2 கிலாஸ்
பன்னீர்(Rosewatter) – 2 சிறிய போத்தல்
அல்மண்ட் எசன்ஸ்(Almond essence) – 2 போத்தல்
வெனிலா – 6 போத்தல்
ஏலக்காய்த்தூள் – 10 தேக்கரண்டி
ஜாதிக்காய்த்தூள் – 10 தேக்கரண்டி
கறுவாத்தூள் – 10 தேக்கரண்டி
கிராம்பு – 5 தேக்கரண்டி
ஸ்ட்ரா பெர்ரி ஜாம் – 2 போத்தல்
அன்னாசிப்பழ ஜாம் – 2 போத்தல்

செய்முறை :

மேலே கொடுத்துள்ள பழங்கள், பாகுக்குள் இருக்கும் இஞ்சி, பூசணி, செளசெள மற்றும் முந்திரிப்பருப்பு எல்லாவற்றையும் பொடியாக நறுக்கவும்.

ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் வெட்டிய பொருட்கள் எல்லாவற்றையும் போடவும்.

அதில் எசன்ஸ், பன்னீர், கோல்டன்சிரப், பிரண்டி, தேன், வனிலா, ஏலம், கறுவா, ஜாதிக்காய், கிராம்புதூள்கள் மற்றும் ஜாம் இரண்டில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொன்று சேர்க்கவும்.

மரக்கரண்டியால் நன்றாக கலந்து மூடி ஒருமாதம் ஊறவைக்கவும்.

ஒரு கிழமைக்கு ஒருமுறை நன்றாக பிரட்டி ஊறவைக்கவும்.

பின்பு ரவையை பொன்னிறமாக வறுத்து வைக்கவும்.

பின்பு 60 முட்டையில் 36 முட்டையின் வெள்ளைகருவைவும் 60 முட்டையின் மஞ்சள்கருவையும் தனித்தனியாக் எடுத்து வைக்கவும்.

சீனியையும் மாஜரீனையும் சேர்த்து நன்றாக அடிக்கவும்.

முட்டையின் வெள்ளைக்கருவையும் மஞ்சள்கருவையும் தனித்தனியாக நுரைவரும்வரை நன்றாக அடிக்கவும்.

பின்பு பழக்கலவைக்குள் சீனிக்கவை, ரவை அடித்துவைத்துள்ள முட்டை வெள்ளைக்கருவையும், மஞ்சள்கருவையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.

கேக் ரேயில் பேக் பேப்பர் விரித்து அந்த ரேக்கு அளவாக கலவையை ஊற்றி 180 பாகை வெப்பத்தில் பேக்செய்யவும். 3 அல்லது 4 தரம் பேக் செய்ய வேண்டும்.

பின்பு ஒரு பெரிய பாத்திரத்தில் பேக்செய்த கேக்குகளைக் கொட்டி மீதம் இருக்கும் இரண்டு போத்தல் ஜாம்மையும் சேர்த்து நன்றாக கலக்கி கேக் ரேயில் போட்டு தட்டி சிறிய துண்டுகளாக் வெட்டி எடுக்கவேண்டும்.

வெட்டிய துண்டுக்களை ஓயில் பேப்பரில் சுற்றி ரிச்கேக் பெட்டியில் வைத்து பரிமாறலாம்.
richcake

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button