27.8 C
Chennai
Saturday, May 17, 2025
201701310830040496 Among women premenstrual syndrome difficulties SECVPF
மருத்துவ குறிப்பு

பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்குக்கு முந்தைய சங்கடங்கள்

நன்றாக சாப்பிடுவது, தூங்குவது என்று மனதை சந்தோஷமாக வைத்துக்கொண்டாலே பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்குக்கு முந்தைய சங்கடங்களை தவிர்க்கலாம்.

பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்குக்கு முந்தைய சங்கடங்கள்
பெண்கள் பலரையும் பாடாய்ப் படுத்தும் ஒரு விஷயம் மாதவிலக்கு. சிலருக்கு எளிதாய் கடந்து போய்விடும் அந்த மூன்று நாட்கள். பலருக்கு ஒரு யுகமாக கடக்கிறது. இந்த மாதவிலக்கு இன்னும் சிலருக்கு கூடுதலாக மேலும் சில பிரச்சினைகளை தருகிறது. இதனை ஆங்கிலத்தில் ‘ப்ரீ மென்ஸ்சுரல் சிண்ட்ரோம்’ என்று அழைக்கிறார்கள். அதாவது மாதவிலக்கு வருவதற்கு முன் பெண்களுக்கு ஏற்படுகிற உடல்நல பிரச்சினைகள்.

பல பெண்களுக்கு மாதவிலக்கு வருவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன் படபடப்பு, எரிச்சல், காரணமற்ற கோபம், உடல் எடை அதிகரித்து வயிறு உப்பியது போன்ற எண்ணம், மார்பகம் கனமாக இருப்பது போன்ற உணர்வு, எரிச்சல், உணவு பிடிக்காமல் இருப்பது, தூக்கமின்மை, அழுகை வருவது போன்ற பலவகையான உணர்வுகளுக்கு பெண்கள் ஆளாகிறார்கள். இந்த உணர்வுகள் எல்லாம் ‘ப்ரீ மென்ஸ்சுரல் சிண்ட்ரோம்’ பாதிப்பு என்கிறது மருத்துவம். சிலருக்கு இந்த அறிகுறிகள் எல்லாம் மாதவிலக்கு சமயத்திலும் தொடர்கின்றன.

இந்த பிரச்சினைகள் ஏற்படுவதற்கான காரணம் பற்றிய ஆராய்ச்சி இன்றுவரை தொடர்கிறது. இது ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படுகின்றதா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என்று கண்டுபிடிக்க முடியாமல் விஞ்ஞானிகளும் திணறுகிறார்கள். இதில் என்னவொரு வேடிக்கை என்றால் இந்த பிரச்சினையைப்பற்றி அந்தப் பெண்ணின் தாய் மற்றும் சகோதரிகள் கூட புரிந்துகொள்வதில்லை என்பதுதான். ஏன் ஒவ்வொரு மாசமும் இப்படி பிரச்சினை பண்ற என்பதுதான் அவர்களின் பார்வையாக இருக்கிறது.

அந்தப் பெண்கள் ‘பி.எம்.எஸ்.’ என்று சுருக்கமாக அழைக்கப்படும் மாதவிலக்குக்கு முந்தைய பிரச்சினையில் இருக்கிறார்கள் என்று அர்த்தம். இது நோயல்ல மாதவிலக்குக்கு முந்தைய சமயத்திலும் சிலருக்கு மாதவிலக்கு சமயத்திலும் ஏற்படுகிற சிறிய அளவிலான மன அழுத்தம் என்பதை புரிந்து கொண்டாலே பாதி பிரச்சினை தீர்ந்துவிடும்.

பொதுவாக மாதவிலக்கு ஏற்படுவதற்கு சில நாட்கள் முன்பாக சாப்பாட்டில் உப்பின் அளவை குறைக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். டென்சன் காரணமாக ரத்த அழுத்தம் உயராமல் இருக்கத்தான் இந்த உப்புக் கட்டுப்பாடு. இதோடு கூட யோகா, தியானம் போன்றவற்றைச் செய்தால் மன அமைதி கிடைக்கும். அந்த சமயத்தில் மன இறுக்கத்தால் தூங்க முடியாமல் அவதிப்படுபவர்கள் மனநல மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறலாம்.

வைட்டமின் குறைபாடு இருந்தால் மட்டும் மருத்துவரின் அறிவுரைப்படி மாதவிலக்கு நாட்களில் வைட்டமின் மாத்திரைகளை சாப்பிடலாம். நன்றாக சாப்பிடுவது, தூங்குவது என்று மனதை சந்தோஷமாக வைத்துக்கொண்டாலே மாதவிலக்குக்கு முந்தைய சங்கடங்களை தவிர்க்கலாம். மாதவிலக்கு முடியும் போது இந்தப் பிரச்சினையும் தானாக மறைந்துவிடும். 201701310830040496 Among women premenstrual syndrome difficulties SECVPF

Related posts

மருத்துவர் கூறும் தகவல்கள்! பெண்கள் கருவுறாமைக்கான முக்கியமான காரணம் என்ன? எந்தவகை பரிசோதனைகள் செய்யலாம்?

nathan

உங்களுக்கு தெரியுமா தொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்

nathan

நீங்க வெஜிடேரியனா? அப்ப நீங்க ரொம்ப நாள் உயிர் வாழ்வீங்க…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…35 வது வாரத்தில் குழந்தை பிறந்தால் ஆரோக்கியத்திற்கு ஆபத்து !!!

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…ஆண் மைக் குறைவை ஏற்படுத்தும் டெஸ்டோஸ் டிரோன் குறைவாக இருப்பதற்கான காரணங்கள்!!!

nathan

வல்லாரையின் மருத்துவச் செயல்பாடுகள்!!

nathan

அடேங்கப்பா! உடல் நலத்தை காக்கும் செம்பருத்தி பூ; எப்படி தெரியுமா…?

nathan

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க வேண்டுமா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

கழுத்துக்கு பின் ஐஸ் கட்டியை 20 நிமிடம் வைப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தெரியுமா?

nathan