28.5 C
Chennai
Monday, May 19, 2025
201611300930549518 hot spicy noodles SECVPF
சிற்றுண்டி வகைகள்

குழந்தைகளுக்கு விருப்பமான ஹாட் மசாலா நூடுல்ஸ்

குழந்தைகளுக்கு நூடுல்ஸ் மிகவும் பிடிக்கும். காலையில் டிபன் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு சூப்பரான ஹாட் மசாலா நூடுல்ஸ் செய்து கொடுத்து அசத்துங்கள்.

குழந்தைகளுக்கு விருப்பமான ஹாட் மசாலா நூடுல்ஸ்
தேவையான பொருட்கள் :

பிளெய்ன் நூடுல்ஸ் – 2 பாக்கெட் (200 கிராம்),
வெங்காயம் – 2
கோஸ் – சிறிதளவு
கேரட் – 1 ,
குடமிளகாய்- 1
பூண்டு – 4 பல்
பச்சை மிளகாய் – 2,
மிளகுத்தூள், சாட் மசாலாத் தூள் – தலா அரை டீஸ்பூன்,
தக்காளி சாஸ் – 3 டீஸ்பூன்,
சில்லி சாஸ் – 2 டீஸ்பூன்,
சோயா சாஸ் – ஒரு டீஸ்பூன்,
வெங்காயத்தாள் – கால் கப்,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை :

* வெங்காயம், பூண்டு, வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கோஸ், கேரட், குடமிளகாயை நீளவாக்கில் மெலிதான நறுக்கி கொள்ளவும்.

* நூடுல்ஸை கொதிக்கும் நீரில் போட்டு, பின் வடிகட்டி, குளிர்ந்த நீரில் போட்டு அலசி தனியே வடித்து வைக்கவும்.

* ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதங்கி… கோஸ், கேரட், குடமிளகாய், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.

* காய்கறிகள் முக்கால் பாகம் வெந்தவுடன் மிளகுத்தூள், சாட் மசாலாத்தூள், உப்பு சேர்த்துக் கிளறி… தக்காளி சாஸ், சில்லி சாஸ், சோயா சாஸ் சேர்த்துக் கலக்கவும்.

* பின்னர் வேக வைத்த நூடுல்ஸை சேர்த்து நன்றாகக் கலக்கி… வெங்காயத்தாள் தூவி சூடாகப் பரிமாறவும்.201611300930549518 hot spicy noodles SECVPF

Related posts

மொறு மொறு அச்சு முறுக்கு செய்வது எப்படி…?

nathan

சத்தான கம்பு – காலிபிளவர் அடை

nathan

சீஸ் ரோல்

nathan

கொல்கத்தா ஸ்பெஷல் ஸ்நாக்ஸ் ஜால் முரி

nathan

சில்லி சப்பாத்தி / Chilli Chapathi

nathan

தால் கார சோமாஸி

nathan

சில்லி கொத்து சப்பாத்தி

nathan

சர்க்கரை வள்ளிக்கிழங்கு தோசை

nathan

செட் தோசை

nathan