சிற்றுண்டி வகைகள்

குழந்தைகளுக்கு விருப்பமான இட்லி சாட்

மாலையில் பள்ளி முடிந்து பசியுடன் வரும் குழந்தையின் பசியை வித்தியாசமான ஸ்நாக்ஸ் மூலம் போக்க நினைத்தால், இட்லி சாட் செய்து கொடுங்கள்.

குழந்தைகளுக்கு விருப்பமான இட்லி சாட்
தேவையான பொருட்கள்:

மினி இட்லி – 16
தயிர் – 4 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1
மிளகாய் தூள் – சிறிது
சீரகப் பொடி – சிறிது
சாட் மசாலா – சிறிது
புதினா சட்னி – சிறிது
இனிப்பு சட்னி – சிறிது
ஓமப்பொடி – சிறிது
வெண்ணெய் – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிது
கேரட் – 1
உப்பு – தேவையான அளவு

இனிப்பு சட்னிக்கு…

பேரிச்சம் பழம் – 8 (விதை நீக்கியது)
புளி – சிறு நெல்லிக்காய் அளவு
வெல்லம் – 1 டேபிள் ஸ்பூன்
சீரகப் பொடி – 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்

இனிப்பு சட்னி செய்முறை :

* பேரிச்சம் பழம் மற்றும் புளியை நீரில் 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு புளியில் உள்ள நார் மற்றும் விதையை நீக்கிவிட்டு, அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் பேரிச்சம் பழம் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைத்து இறக்கி, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து, அத்துடன் வெல்லம், சீரகப் பொடி, மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். இது தான் இனிப்பு சட்னி.

இட்லி சாட் செய்முறை :

* கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கேரட்டை துருவிக் கொள்ளவும்.

* ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும் அதில் இட்லிகளை வைத்து, மேலே சிறிது வெண்ணெய் தடவி டோஸ்ட் செய்து எடுத்துக் கொள்ளவும்.

* பின்னர் ஒரு தட்டில் அந்த மினி இட்லிகளை வைத்து, அதன் மேல் முதலில் தயிர் ஊற்றி, மேலே இனிப்பு சட்னி, புதினா சட்னி, வெங்காயம், துருவிய கேரட், சிறிது சீரகப் பொடி மற்றும் சாட் மசாலா தூவி, இறுதியில் ஓமப்பொடி மற்றும் கொத்தமல்லியைத் தூவ வேண்டும்.

* இப்போது சுவையான இட்லி சாட் ரெடி!!!201609201413480623 how to make idli chaat recipe SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button