என்னென்ன தேவை?
ஸ்ட்ராபெர்ரி – 1 கப்,
பால் – 1/4 கப்,
கன்டென்ஸ்டு மில்க் – 1/2 கப்,
ஃப்ரெஷ் க்ரீம் – 1 கப்,
லெமன் ஜூஸ் – 1 டீஸ்பூன்,
சர்க்கரை – 1/4 கப்,
உப்பு – ஒரு சிட்டிகை.
எப்படிச் செய்வது?
ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் ஃப்ரெஷ் க்ரீம் சேர்க்கவும். ஒரு வைப்பரால் சாஃப்டான க்ரீம் ஆகும் வரை நன்கு அடிக்கவும். மிக்ஸியில் ஸ்ட்ராபெர்ரி பழத்தைப் போட்டு 3/4 பல்ப் (கூழ்) பதத்துக்கு அடிக்கவும். பிறகு ஃப்ரெஷ் க்ரீம் கலவை, கன்டென்ஸ்டு மில்க், லெமன் ஜூஸ், பால், சர்க்கரை மற்றும் ஸ்ட்ராபெர்ரி பல்ப் அனைத்தையும் ஒன்றாகச் சேர்க்கவும். உப்பு சேர்க்கவும். அதை ஃப்ரீசரில் 1 மணி நேரம் வைத்து எடுக்கவும். பிறகு எடுத்து ஸ்பூனால் நன்கு கலக்கவும். இதை 7-8 மணி நேரம் ஃப்ரீசரில் மறுபடியும் வைக்கவும். பின் பரிமாறவும்.