ஐஸ்க்ரீம் வகைகள்

பட்டர் புட்டிங்

தேவையானவை:
வெண்ணெய் – 75 கிராம்
மைதா – 75 கிராம்
பொடித்த சர்க்கரை – 75 கிராம்
வெண்ணிலா எசன்ஸ் – ஒரு டேபிள்ஸ்பூன்
முட்டை – 1
பேக்கிங் பவுடர் – கால் டீஸ்பூன்

செய்முறை:
அகலமான பாத்திரத்தில் வெண்ணெய், பொடித்த சர்க்கரையை சேர்த்து கிரீம் போல் அடித்துக் கொள்ளவும். இதனுடன் முட்டை, வெண்ணிலா எசன்ஸ், பேக்கிங் பவுடர், மைதா சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். இந்தக் கலவையை வெண்ணெய் தடவிய சிறிய அலுமினிய கிண்ணத்தில் ஊற்றி அதனை ஓவனில் 150 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் 30 நிமிடங்களுக்கு வைக்கவும். பிறகு ஓவனில் இருந்து கிண்ணத்தை வெளியே எடுத்து அதில் இருக்கும் தயாரான பட்டர் புட்டிங்கை எடுத்து, அதன் மேல் சாக்லேட் சாஸ் ஊற்றி அலங்கரித்து பரிமாறலாம்.
குறிப்பு: ஓவனுக்கு பதிலாக இட்லி பாத்திரத்தில் கிண்ணத்தை சில்வர் ஃபாயிலில் மூடி வேக வைக்கலாம்.

Related posts

சக்தியை அதிகப்படுத்தும் ஸ்மூத்தீஸ்

nathan

ஐஸ்கிரீம் கேக்

nathan

வரகு அரிசி ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தி

nathan

ஹெர்பல் மாய்சரைஸர்

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் குல்ஃபி

nathan

ஆரஞ்சு – ஸ்ட்ராபெர்ரி பாப்சிகிள்

nathan

சுவையான மாம்பழ பிர்னி

nathan

வைட்டமின் சி ஸ்மூத்தீ

nathan

சாக்லேட் ஐஸ்க்ரீம்

nathan