63971154
ஐஸ்க்ரீம் வகைகள்

சுவையான வெனிலா ஐஸ்கிரீம்

என்னென்ன தேவை?

கட்டிப்பால் – 1/4 கப்
பால்மா – 1/2 கப்
தண்ணீர் – 3/4 கப்
வனிலா எசன்ஸ் – 1/4 கப்

எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் கட்டிப்பாலுடன் கால் கப் தண்ணீர் விட்டு வனிலா சேர்த்து கரைத்துக் கொள்ளவும். பால்மாவை அரைக் கப் தண்ணீரில் கட்டி இல்லாமல் கரைக்கவும். இரண்டையும் தனித்தனியே ஃபிரீஸரினுள் அரை மணிநேரம் வைத்து எடுக்கவும்.

ஒரு பெரிய பாத்திரத்தில் ஜில் தண்ணீர் நிரப்பி அதனுள் பால்மா கரைசல் பாத்திரத்தை வைத்து கரண்டியால் நன்கு பொங்க பொங்க அடிக்கவும். பின்னர் இதை கட்டிப்பால் கரைசலினுள் சேர்த்து மெதுவாக கலக்கவும். பின் ஒரு தட்டையான பாத்திரத்தில் கலவையை ஊற்றி ஃபிரீஸரில் ஒரு மணிநேரம் வைத்து எடுக்கவும். மீண்டும் கரண்டியால் பொங்க பொங்க அடிக்கவும். ஃபிரீஸரில் வைத்து இறுகியதும் எடுத்து பரிமாறலாம்.

Related posts

சுவையான ஃபுரூட் சாலட்

nathan

ஃப்ரூட் சாலட் வித் ஐஸ்கிரீம்

nathan

டிராகன் ஃப்ரூட் ஜூஸ் செய்முறை விளக்கம்

nathan

ஆரஞ்சு – ஸ்ட்ராபெர்ரி பாப்சிகிள்

nathan

அன்னாசிப்பழ புட்டிங்

nathan

காரமல் கஸ்டெர்ட் (caramel custard)

nathan

அரிசி பாயாசம் செய்வது எப்படி என்று பார்ப்போம்…!

nathan

பைனாபிள் – செர்ரி ஜஸ்க்ரீம்

nathan

மாம்பழ குச்சி ஐஸ் செய்து சுவையுங்கள்!

nathan