30.3 C
Chennai
Tuesday, May 21, 2024
1 tiffin sambar 1669744632
சமையல் குறிப்புகள்

ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சாம்பார்

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* வெங்காயம் – 1 (நறுக்கியது)

* பச்சை மிளகாய் – 3

* தக்காளி – 3

* உருளைக்கிழங்கு – 2 (துண்டுகளாக்கப்பட்டது)

* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

* துவரம் பருப்பு – 1/2 கப்

* பாசிப் பருப்பு – 1/4 கப்

* சாம்பார் தூள் – 1 1/2 டேபிள் ஸ்பூன்

* மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

* புளிச்சாறு – 1 டேபிள் ஸ்பூன்

* வெல்லம் – 1 டேபிள் ஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* கொத்தமல்லி – சிறிது

தாளிப்பதற்கு…

* நெய் – 1 டேபிள் ஸ்பூன்

* கடுகு – 1 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

* சீரகம் – 1 டீஸ்பூன்

* வரமிளகாய் – 2

* பெருங்காயத் தூள் – 1/2 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது1 tiffin sambar 1669744632

செய்முறை:

* முதலில் பாசிப் பருப்பு மற்றும் துவரம் பருப்பை நன்கு நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.

* பின் அந்த கழுவிய பருப்புக்களை குக்கரில் போட்டு, அத்துடன் உருளைகிழங்கு துண்டுகளையும் சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து குக்கரை மூடி 3 விசில் விட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்து, உருளைக்கிழங்கு துண்டுகளை கையால் உடைத்து விட வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.

Restaurant Style Tiffin Sambar Recipe In Tamil
* பின்னர் அதில் தக்காளியைப் போட்டு சிறிது உப்பு தூவி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

* பின் அதில் வேக வைத்த பருப்பை உருளைக்கிழங்குடன் சேர்த்து கிளற வேண்டும்.

* பிறகு சிறிது நீரில் சாம்பார் தூள், மல்லித் தூள் மற்றும் மஞ்சள் தூள் என அனைத்தையும் சேர்த்து கலந்து, அந்நீரை வாணலியில் உள்ள பருப்புடன் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* அடுத்து அதில் புளிச்சாறு, சுவைக்கேற்ப உப்பு, வெல்லம் சேர்த்து நன்கு கிளறி, தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு கலந்து குறைவான தீயில் வைத்து 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

* சாம்பார் நன்கு கொதித்ததும், அடுப்பை அணைத்து விட வேண்டும்.

* இறுதியாக தாளிப்பதற்கு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள நெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், வரமிளகாய், பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின்பு தாளித்ததை சாம்பாரில் ஊற்றி, அதன் மேல் கொத்தமல்லியைத் தூவினால், சுவையான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் டிபன் சாம்பார் தயார்.

Related posts

பட்டாணி கிரேவி

nathan

சுவையான பிரட் சாட் ரெசிபி

nathan

இட்லி சாப்பிட்டு போரடிக்குதா? இப்படி செஞ்சு சாப்பிடுங்க

nathan

இஞ்சி குழம்பு

nathan

சுவையான பனீர் டிக்கா! தயார் செய்வது எப்படி?

nathan

தக்காளி கெட்சப் பாஸ்தா!

nathan

சுவையான சுரைக்காய் பொரியல்

nathan

சுவையான கேரட் சீஸ் சப்பாத்தி

nathan

paneer recipe – பன்னீர் கிரேவி

nathan