32.1 C
Chennai
Sunday, May 11, 2025
capsicum sambar 1624867105
Other News

சுவையான குடைமிளகாய் சாம்பார்

தேவையான பொருட்கள்:

* குடைமிளகாய் – 1-2

* துவரம் பருப்பு – 1/2 கப்

* பெரிய வெங்காயம் – 1

* தக்காளி – 1/2

* புளி – 1 நெல்லிக்காய் அளவு

* பெருங்காயத் தூள் – 1/2 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* சாம்பார் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு…

* கடுகு – 1 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்

* வெந்தயம் – 1 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

* முதலில் வெங்காயம், தக்காளி மற்றும் குடைமிளகாயை நறுக்கிக் கொள்ள வேண்டும்.

* பின் புளியை 1/2 கப் நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் குக்கரில் துவரம் பருப்பை கழுவிப் போட்டு, போதுமான அளவு நீரை ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து, 2-3 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பிறகு வெங்காயத்தைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கி, அதைத் தொடர்ந்து தக்காளியைப் போட்டு நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் குடைமிளகாயை சேர்த்து 3 நிமிடம் வதக்க வேண்டும்.

* அதன் பின் சாம்பார் பவுடர் மற்றும் உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பின் புளியை கையால் பிசைந்து, வடிகட்டி அந்நீரை ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

* இறுதியாக வேக வைத்துள்ள துவரம் பருப்பை சேர்த்து, தேவையான அளவு நீர் ஊற்றி, உப்பு சேர்த்து, மிதமான தீயில் நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான குடைமிளகாய் சாம்பார் தயார்.

Related posts

நடிகை ரோஜாவின் ஆசை! அந்த நடிகருக்கு அக்காவா நடிக்கணும்..

nathan

தமிழில் பேசினால் ஆங்கிலத்தில் வரும்.. மொழியை மாற்றும் வாட்ஸ் அப் – முழு விவரம்!

nathan

ரஜினியுடன் நடிக்க யோகி பாபு வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

nathan

இலங்கையில் அந்தரங்க உறுப்பை பாக்குவெட்டியால் துண்டித்த மனைவி

nathan

சிறகடிக்க ஆசை மீனாவின் செம்ம கியூட்டான புகைப்படங்கள்

nathan

அதிக நேரம் ‘SpaceWalk’ சாதனை படைத்த சுனிதா வில்லியம்ஸ்!!

nathan

பிக் பாஸ் 7-ல் தெறிக்க விடும் அர்ச்சனாவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.!

nathan

பெண்களிடம் எப்படி பேசறான் பாருங்க..? நண்பனின் காதலியையும் விட்டுவைக்காத காசி..!!

nathan

முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து -பந்தயம் அடித்த அஜித் குமார்..

nathan