30.2 C
Chennai
Thursday, Jul 31, 2025
capsicum sambar 1624867105
Other News

சுவையான குடைமிளகாய் சாம்பார்

தேவையான பொருட்கள்:

* குடைமிளகாய் – 1-2

* துவரம் பருப்பு – 1/2 கப்

* பெரிய வெங்காயம் – 1

* தக்காளி – 1/2

* புளி – 1 நெல்லிக்காய் அளவு

* பெருங்காயத் தூள் – 1/2 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* சாம்பார் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு…

* கடுகு – 1 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்

* வெந்தயம் – 1 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:

* முதலில் வெங்காயம், தக்காளி மற்றும் குடைமிளகாயை நறுக்கிக் கொள்ள வேண்டும்.

* பின் புளியை 1/2 கப் நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் குக்கரில் துவரம் பருப்பை கழுவிப் போட்டு, போதுமான அளவு நீரை ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து, 2-3 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பிறகு வெங்காயத்தைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கி, அதைத் தொடர்ந்து தக்காளியைப் போட்டு நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் குடைமிளகாயை சேர்த்து 3 நிமிடம் வதக்க வேண்டும்.

* அதன் பின் சாம்பார் பவுடர் மற்றும் உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பின் புளியை கையால் பிசைந்து, வடிகட்டி அந்நீரை ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

* இறுதியாக வேக வைத்துள்ள துவரம் பருப்பை சேர்த்து, தேவையான அளவு நீர் ஊற்றி, உப்பு சேர்த்து, மிதமான தீயில் நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான குடைமிளகாய் சாம்பார் தயார்.

Related posts

மணக்கோலத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ்.. புகைப்படங்கள்

nathan

மனைவி நிக்கியுடன் ROMANTIC DINNER சென்ற நடிகர் ஆதி

nathan

ரஜினியுடன் இருக்கும் இந்த குழந்தை யார் என்று தெரியுதா?

nathan

காதலியின் அருகில் படுத்து ஊழியர் சில்மிஷம்..ரூம் போட்ட காதலர்கள்..

nathan

2023ல் விவாகரத்து பெற வாய்ப்புள்ள ராசிக்காரர்கள்…

nathan

40 வயது பெண்ணுடன் காட்டில் உல்லாசம்…!

nathan

தேங்காய் சாதம்

nathan

பெயரை மாற்றுவது எப்படி பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்..?

nathan

பெண்ணின் வயிற்றில் கத்தரிகோலை வைத்து தைத்து அனுப்பிய மருத்துவர்கள்..!

nathan