தலைமுடி சிகிச்சை

உங்களுக்கு தலை சீவும் போது முடி கொத்தா கையோடு வருதா? அப்ப தினமும் செய்யுங்க…

முடி உதிர்வு என்பது பெண்கள், ஆண்கள் என அனைவரும் சந்திக்கும் ஒரு பெரும் பிரச்னையாகவே மாறிவிட்டது. மாசடைந்த சுற்றுசூழலில் வாழும் ஒவ்வொருவரும் நிச்சயம் ஏதாவது ஒரு கூந்தல் பிரச்னையை சந்திக்க நேரிடுகிறது. இதிலிருந்து விடுபடுவதற்காக, விலையுயர்ந்த ஷாம்பூ, கண்டிஷ்னர் மற்றும் சீரம் போன்ற பல்வேறு வழிமுறைகளை மேற்கொள்பவர்களே இங்கு அதிகம்.

 

இவை எல்லாவற்றிற்கும் ஓர் முற்றுப்புள்ளியாக, இயற்றை முறையில் சில வைத்தியங்களை இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம். கெமிக்கல் இல்லாத இயற்கை மருந்தை பயன்படுத்தும் போது, எவ்வித பக்கவிளையும் ஏற்படாது என்ற நம்பிக்கையில் நாம் செய்யலாம் அல்லவா? கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, முடி உதிர்வை தடுக்க உதவும் காய்கறிகள் மற்றும் பழங்களின் ஜூஸ் பற்றி இப்போது பார்க்க போகிறோம்…

வெங்காய ஜூஸ்

கூந்தல் ஆரோக்கியத்திற்கு வெங்காயம் சிறந்தது என்று அனைவருக்குமே தெரிந்த ஒன்று தான். கூந்தலுக்கு வெங்காய ஜூஸ் தேய்ப்பதன் மூலம் நரை முடி வராமல் தடுத்திடலாம். மேலும், இந்த ஜூஸை பயன்படுத்தி ஸ்கால்ப்பில் மசாஜ் செய்தால் ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சியை பெறலாம். இவை முடிகளுக்கு ஊட்டமளித்து, முடியை வேரிலிருந்து வலிமையாக்குகிறது.

கற்றாழை ஜூஸ்

கற்றாழை ஜெல்லை பயன்படுத்துவதற்கு பதிலாக, கற்றாழையில் ஜூஸ் எடுத்து ஸ்கால்ப்களில் தடவி மசாஜ் செய்யவும். இதன்மூலம், முடி உதிர்வு மற்றும் கூந்தல் வெடிப்பு போன்றவற்றை தடுத்து முடிக்கு வலிமை சேர்த்திடும். பொடுகு தொல்லைக்கு இது ஓர் அற்புத மருந்து மற்றும் இயற்றை பொலிவு மற்றும் மென்மையை இது கூந்தலுக்கு தரக்கூடியது.

பூண்டு ஜூஸ்

ஆன்டி-ஃபங்கல் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் குணம் பூண்டில் அதிகமாக உள்ளது. ஆரோக்கியமான கூந்தலுக்கான ஆயுர்வேத மருந்துகளில் பயன்படுத்தப்படும் மிக முக்கிய பொருட்களில் பூண்டும் ஒன்று. பூண்டு ஜூஸை ஸ்கால்ப்பில் தேய்த்து மசாஜ் செய்து வர, இரத்த ஓட்டம் அதிகமாகி, இழந்த கூந்தல், மென்மை மற்றும் வலிமையை சுலபமாக பெற்றிடலாம்.

கிவி ஜூஸ்

கிவி பழத்தை சாப்பிடுவது உடலுக்கான நன்மைகளை மட்டுமே செய்யக்கூடிய பழம் என்று பார்க்க வேண்டாம். இது கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் சிறந்தது. கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான மிக முக்கிய சத்தான வைட்டமின் ஈ இந்த பழத்தில் அதிகமாகவே உள்ளது. இந்த ஜூஸ் பயன்படுத்தினால், ஸ்கால்ப்பை சுத்தம் செய்வதோடு, முடி உதிர்வை குறைக்கவும் செய்யும்.

கீரை ஜூஸ்

கீரையில் வைட்டமின்களும், புரதங்களும் நிறைந்துள்ளன. எனவே, இவை கூந்தலுக்கு மிகவும் நல்லது. அடிக்கடி உணவில் கீரை சேர்த்துக்கொள்வதோடு, கீரை ஜூஸை கூந்தகூக்கும் பயன்படுத்துங்கள். வாரத்தில் 2 முறை இந்த ஜூஸை ஸ்கால்ப்பில் தேய்ப்பதன் மூலம், கூந்தல் அடர்த்தி குறைந்தவர்கள் கூட, அடத்தியான கூந்தலை பெற்றிடலாம். கீரையில் உள்ள வைட்டமின் பி, கூந்தல் வளர்ச்சியை அதிகப்படுத்தும்.

கேரட் ஜூஸ்

கேரட்டில், வைட்டமின் சி, பீட்டா கரோட்டீன் உள்ளது. இது கூந்தலுக்கு இயற்கையாக பொலிவையிம், நிறத்தையும் கொடுக்கக்கூடியது. ஸ்கால்ப்பில் கேரட் ஜூஸ் தேய்ப்பதன் மூலம், மயிர்கால்கள் வலிமையடைந்து, முடி உடைவது குறையும்.

வெள்ளரி ஜூஸ்

குளிரூட்டும் மற்றும் இனிமையாக்கும் பண்புகள் வெள்ளரிக்காயில் அதிகமாக உள்ளது. இதிலிருந்து வெளிவரும் என்சைம்ஸ், ஸ்கால்ப்களில் ஏற்படக்கூடிய அரிப்புகளில் இருந்து உங்களை விடுவிக்கும். மேலும், இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி மயிர்கால்களுக்கு ஊட்டமளிக்கிறது. இதனை தொடர்ந்து பயன்படுத்த முடியின் வலிமையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதை பார்க்கலாம்.

கொத்தமல்லி ஜூஸ்

முடி உதிர்வை தடுக்க கொத்தமல்லி ஜூஸ் நிச்சயம் உதவும். கொத்தமல்லியை அரைத்து ஜூஸ் எடுத்து, ஸ்கால்ப்பில் தெய்க்கவும். ஒரு மணி நேரம் கழித்து கெமிக்கல் குறைந்த ஷாம்புவை பயன்படுத்து கூந்தலை கழுவிடவும். இதன்மூலம், நல்ல மாற்றம் ஏற்படுவதை பார்க்கலாம்.

கொய்யா ஜூஸ்

கொய்யாப்பழத்தில் ஆன்டிஆக்சிடன்ட் மற்றும் அத்தியாவசியமான வைட்டமின்கள் மற்றும் புரதங்களான ஃபோலிக் ஆசிட், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை உள்ளன. கொய்யப்பழத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரை வடிக்கட்டி கூந்தலை கழுவலாம். அல்லது, கொய்யா ஜூஸ் எடுத்து கூட கூந்தலில் தேய்த்து குளிக்கலாம். நல்ல பலன் கிடைக்கும்.10 strawberry ju

ஸ்ட்ராபெர்ரி ஜூஸ்

ஸ்ட்ராபெர்ரி பழத்தில் உள்ள வைட்டமின் சி கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. ஸ்ட்ராபெர்ரியை அப்படியே நறுக்கி தலையில் தேய்க்கலாம் அல்லது ஜூஸ் எடுத்து கூட ஸ்கால்ப்பில் மசாஜ் செய்யலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button