27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
bachelor sambar 1637846266
சமையல் குறிப்புகள்

பேச்சுலர் சாம்பார்

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* கடுகு – 1/2 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்

* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

* கறிவேப்பிலை – சிறிது

* வெங்காயம் – 1 (நறுக்கியது)

* பச்சை மிளகாய் – 1 (நீளமாக கீறியது)

* தக்காளி – 2 (நறுக்கியது)

* சாம்பார் பவுடர் – 2-3 டேபிள் ஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* வெல்லம்/சர்க்கரை – 1/2 டீஸ்பூன்

* தண்ணீர் – தேவையான அளவு

* கொத்தமல்லி – சிறிது (நறுக்கியது)

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து, சிறிது உப்பையும் தூவி நன்கு மென்மையாக வதக்க வேண்டும்.

* பின்பு தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி, சாம்பார் பவுடரை சேர்த்து கிளறி, தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

* பிறகு அதில் சர்க்கரை சேர்த்து மூடி வைத்து, குறைவான தீயில் 10 நிமிடம் கொதிக்க வைத்து, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், பேச்சுலர் சாம்பார் தயார்.

Related posts

சூப்பரான கார்ன் இட்லி

nathan

சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையான காலிஃப்ளவர் பட்டாணி குழம்பு ……

sangika

படியுங்க எந்தெந்த பொருள்களை ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது தெரியுமா…?

nathan

சுவையான குடைமிளகாய் வேர்க்கடலை சட்னி

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சமையலறை சாமர்த்தியத் துணுக்குகள்

nathan

கிளப் சாண்ட்விச் பரோட்டா சாப்பிட்டதுண்டா? இன்றே செய்து சாப்பிட்டு பாருங்கள்…

sangika

சுவை மிகுந்த பன்னீர் ஒம்லட்!

nathan

ரேஷன் அரிசியில் மொறு மொறுப்பான தோசை

nathan

மஞ்சள் வெங்காய சட்னி

nathan