சமையல் குறிப்புகள்

மணமணக்கும்.. மணத்தக்காளி வத்தக் குழம்பு

தேவையான பொருட்கள்:

* நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

* பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

Related Articles

* தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)

* பூண்டு – 6 பல்

* கறிவேப்பிலை – சிறிது

* உலர்ந்த மணத்தக்காளி வத்தல் – 1/4 கப்

* புளிச்சாறு – 4 டேபிள் ஸ்பூன் / புளி – 1 சிறிய எலுமிச்சை அளவு

* வத்தக் குழம்பு பொடி – 3 டேபிள் ஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* சர்க்கரை/வெல்லம் – 1 டீஸ்பூன்

* தண்ணீர் – 3 கப்

செய்முறை:

* முதலில் புளியை 1/2 கப் வெதுவெதுப்பான நீரில் 5 நிமிடம் ஊற வைத்து, பின் அதை நன்கு பிசைந்து சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

* பின்பு அதில் தக்காளியை சேர்த்து 2 நிமிடம் மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

Manathakkali Vathal Kuzhambu Recipe In Tamil
* பிறகு அதில் உலர்ந்த மணத்தக்காளி வத்தலை சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும்.

* அடுத்து, அதில் சர்க்கரை, உப்பு மற்றும் வத்தக் குழம்பு பொடி சேர்த்து நன்கு ஒரு நிமிடம் கிளறி விட வேண்டும்.

* பின் அதில் புளிச்சாறு ஊற்றி, தேவையான அளவு நீரையும் ஊற்றி, குழம்பு சற்று சுண்டும் வரை நன்கு 15 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், மணமணக்கும் மணத்தக்காளி வத்தக் குழம்பு தயார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button