34.1 C
Chennai
Wednesday, May 14, 2025
emptypurs
ஆரோக்கியம் குறிப்புகள்

பணம் கையில சேரமாட்டீங்குதா? எனவே இந்த தவறை செய்யாதீர்கள்…

நாம் அனைவரும் நமது நிதி நிலையைப் பற்றி அதிகம் கவலைப்படுகிறோம். நாம் அனைவரும் வாழ்க்கையில் ஓரளவு நிதிப் பாதுகாப்பை விரும்புகிறோம். அதனால் இரவு பகலாக அயராது உழைத்து வருகிறோம். நீங்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் ஒரு சிலரின் கைகளில் தங்குவதில்லை. ஆனால் வாஸ்து கூறும் முறையைப் பின்பற்றினால், உங்கள் வாழ்க்கையில் நல்ல பொருளாதார வாழ்க்கையைப் பெறலாம். மேலும் லட்சுமி தேவியின் அருளைப் பெற்றால் பெரும் செல்வம் பெற்று மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வீர்கள்.

எனவே, லட்சுமி தேவியின் அருளைப் பெற்று, நல்ல பொருளாதார நிலையில் வாழ, சில தவறுகளைத் தவிர்க்க வேண்டும். வாஸ்து சாஸ்திரத்தின் படி, நிதி விஷயத்தில் மக்கள் செய்யும் பல தவறுகள் அவர்களின் நல்வாழ்வையும் செழிப்பையும் பாதிக்கும். எனவே வாஸ்து படி பணத்தை கையாளும் போது தவிர்க்க வேண்டிய சில தவறுகளை பார்க்கலாம்.

எச்சில் கொண்டு பணத்தை கணக்கிடக்கூடாது
பலர் பணத்தைக் கணக்கிடும் போது எச்சிலைப் பயன்படுத்துவார்கள். வாஸ்துப்படி, பணம் லட்சிமி தேவிக்கு சமமானது. பணத்தில் எச்சிலை வைப்பது லட்சுமி தேவியை அவமதிப்பதற்கு சமம். இத்தகைய பழக்கத்தைக் கொண்டவர்கள் லட்சுமி தேவியின் கோபத்தால் வறுமையில் வாட வேண்டியிருக்கும். மேலும் பணத்தில் எச்சிலை வைக்கும் போது பல கைகளுக்கு மாறும் பணத்தில் உள்ள பாக்டீரியாக்கள் உடலினுள் சென்று உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும்.

பணத்தில் எதையும் எழுதாதீர்

பணத்தில் எதையும் எழுதாதீர்கள். இது அந்த பணத்தை அவமதிக்கும் செயல் மட்டுமன்றி, இந்திய அரசின் விதிமுறைகளுக்கு எதிரானதும் கூட. இதுவரை நீங்கள் உங்களிடம் உள்ள பணத்தில் எதையாவது எழுதும் பழக்கத்தைக் கொண்டிருந்தால், இனிமேல் அதை தவிர்த்திடுங்கள்.

பணத்திற்கு மதிப்பளித்து கவனமாக கையாளவும்

பணத்தை எப்போதும் மரியாதையுடனும், கவனமாகவும் கையாளுங்கள். எக்காரணம் கொண்டும் அதை தூக்கி எறியாதீர்கள். உணவுப் பொருட்களை பணத்தின் மேல் வைக்காதீர்கள். பணத்தை ஆங்காங்கு சிதறி இருக்க விடாதீர்கள். உங்கள் கையில் பணம் அதிகம் சேர வேண்டுமென்று நினைத்தால், பணத்தை எப்போதும் மரியாதையுடன் ஒரே இடத்தில் வைத்து பழகுங்கள்.

தேவையில்லாத காகிதங்களுடன் பணத்தை வைத்திருக்காதீர்

பணம் வைக்கும் உங்கள் பர்ஸில் பழைய பில்கள் மற்றும் தேவையில்லாத காகிதங்களை வைத்திருக்காதீர்கள். வாஸ்து சாஸ்திரத்தின் படி, இம்மாதிரியானதை பர்ஸில் வைத்திருப்பதன் மூலம் உங்கள் வருமானம் பாதிக்கப்படும் மற்றும் நிதி நெருக்கடிக்கு வழிவகுக்கும்.

பணத்தை எப்போதும் பாதுகாப்பாக வைத்திருங்கள்

இரவு தூங்கும் போது, உங்கள் பர்ஸ் அல்லது ஹேண்ட் பேக்கை தலைக்கு மேல் வைக்காதீர்கள். எப்போதும் உங்கள் பணத்தை அலமாரி, செல்ப், லாக்கர் போன்றவற்றில் பாதுகாப்பாக வைத்திருங்கள். மேலும் பணத்தை எப்போதும் மடித்து வைக்காதீர்கள். இது பணத்தை அவமரியாதை செய்வது போன்றதாகும்.

Related posts

ஒரே சோப்பை குடும்பத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்தலாமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க! குண்டாக இருப்பவர்களால் ஏன் வேகமாக கருத்தரிக்க முடிவதில்லை என்று தெரியுமா?

nathan

இந்த 5 ராசிக்காரங்களுக்கு முதலாளியா இருக்க கொஞ்சம் கூட தகுதி இருக்காதாம்

nathan

குழந்தைகளுக்கு மனநல பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை உணர்த்தும் அறிகுறிகள்!

nathan

அகமும் சார்ந்ததே அழகு!

nathan

உங்களுக்குதான் இந்த விஷயம் தெரியுமா எண்ணெயை விட நெய்யால் விளக்கேற்றி வழிபடுவது ஏன் சிறந்தது என்று புராணங்கள் கூறுகிறது தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா? ஜப்பான் மற்றும் கொரிய மக்கள் ஸ்லிம்மாக இருக்க காரணம்

nathan

வயிற்றில் உள்ள கெட்ட கொழுப்புக்களைக் கரைக்கணுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா மாத்திரைகளில் போடப்பட்டிருக்கும் இந்த சிவப்பு கோடு எதற்காக ?

nathan