ஆரோக்கியம் குறிப்புகள்

இந்த மோசமான வெயிலினால் நமக்கு ஏற்படும் அபாயங்கள் என்னென்ன தெரியுமா?

கொளுத்தும் வெயிலில் இருக்கும் இடத்தை விட்டு நகர்வதற்கு கூட பயமாக தான் இருக்கிறது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறதே தவிர குறைந்தபாடில்லை. ஒவ்வொரு நாளும் மிகவும் மோசமான அளவே வெயில் நம் மீது அதன் கொடூர பார்வையை செலுத்துகிறது.

கோடை காலம் ஆரம்பித்து விட்டாலே யாருக்காக இருந்தாலும் ஒரு வித தனி பயம் இருக்க தான் செய்யும். வெயில் காலங்களில் வெளியில் செல்லும் போது எவ்வளவு வெள்ளையாக இருந்தாலும், வீட்டிற்கு திரும்பி வரும்போது நாம் யார் என்பது நமக்கே தெரியாத அளவிற்கு மாறிவிடுவோம்.

அதுவும் இன்றைய நாட்களில் அதிகரித்து வரும் வெயிலில், வெளியில் சென்றால் நிச்சயம் உங்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட கூடும். நமது உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை இந்த வெயிலுக்கு இரையாக வாய்ப்புகள் உள்ளது.

இந்த மோசமான வெயிலினால் நமக்கு ஏற்படும் அபாயங்கள் என்னென்ன என்பதை இனி அறிந்து கொள்வோம்.

sun1

நெருப்புடா!

சூரியனின் வெப்ப கதிர்கள் இன்றைய நாட்களில் நம் மீது நேரடியாக படுவதால் நிச்சயம் சருமம் பாதிக்கப்படும். சூரியனிடம் இருந்து வருகின்ற புற ஊதா கதிர்கள் நமது தோலில் நேரடியாக படும்போது சூடு கட்டிகளை உருவாக்கி விடுகின்றன.

ஆரம்ப கட்டத்தில் இதனால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. ஆனால், இதுவே நீடித்தால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் கூட உண்டு.

தொற்றுகள்

வெயிலில் காலங்களில் வெளியில் செல்வதால் அதிக அளவில் வியர்த்து கொட்டும். இவை நோய் கிருமிகளை எளிதில் உண்டாக்கும்.

அதிக அளவில் வியர்வை வந்தால் அதனால் நோய் தொற்றுகள் அதிக அளவில் பாதிக்க செய்யும்.

வியர்குறு

அதிக வெயில் உடலில் படும்போது தோலை பாதித்து வியர்குறுவை உண்டாக்கி விடும். இதனால் தோலில் எரிச்சல் அதிகரித்து அந்த இடம் முழுவதையும் பாதித்து விடும். சிலருக்கு இவை அக்கி போன்றோ அல்லது சிரங்கு போன்றோ மாறுபடும்.

வறட்சி

வெயிலின் தாக்கத்தால் தோலில் உள்ள ஈரப்பதம் குறைந்து மிகவும் வறட்சியாக மாறி விடும். இதை தடுக்க அவ்வப்போது உடலில் தேங்காய் எண்ணெய் போன்றவற்றை தடவி வாருங்கள். இவை தோலை பாதிப்பில்லாமல் பார்த்து கொள்ள உதவும்.

வீக்கம்

இரத்த நாளங்கள் சில சமயங்களில் அதிக வெயிலினால் பாதிக்கப்பட்டு வீக்கம் பெற ஆரம்பிக்கும். அதன் பின் ஒரு வித எரிச்சலை உண்டாக்கி காயமாக மாற்றம் பெறும்.

இதற்கு வைட்டமின் பி3 கொண்ட மருந்தை கையில் பயன்படுத்தினாலே சிறந்த பலனை அடைய முடியும்.

மண்டை பகுதி

வெயிலின் தாக்கம் நம் மண்டையையும் விட்டு வைப்பதில்லை. நேரடியாக வெயில் நம் உச்சந்தலை பகுதியில் படுவதால் முற்றிலுமாக இது பாதிக்கப்படுகிறது.

எனவே, வெயிலில் செல்லும் போது தலையில் எதையாவது அணிந்து கொள்வது நல்லது.

பருக்கள்

உடலில் உஷ்ணம் அதிகரிக்க கூடிய காலம் வெயில் காலம் தான். வெயில் காலங்களில் அதிக அளவு வெயில் அடிப்பதால் உடலில் பல இடங்களில் பருக்கள் ஏற்பட தொடங்கும்.

சிலருக்கு இதன் வீரியம் அதிகரித்து உட்காரும் இடம் முதல் முகம் வரை, நிறைய பருக்களை உண்டாக்கி விடும்.

சிவப்பு தோல்

வெயில் பாதிப்பு அதிகமாகினால் கழுத்து, முகம், மார்பு, போன்ற பகுதிகளில் அதிக அளவில் சிவப்பு நிறம் காணப்படும். இதனை தடுக்க சன்ஸ்க்ரீன் லோஷன் போன்றவற்றை பயன்படுத்தினால் அபாயத்தில் இருந்து தப்பிக்கலாம்.

உடல் அரிப்பு

பொதுவாகவே வெயில் காலங்களில் இறுக்கமான, அடர்ந்த நிற ஆடைகளை உடுத்த கூடாது. மீறி உடுத்தினால் இவை நிச்சயம் பாதிப்பை தந்து விடும்.

உடல் முழுக்க அரிப்பு, சிரங்கு, சொறி போன்றவற்றை உருவாக்க இது போன்ற உடைகள் தான் காரணம். ஆதலால், இதனை தவிர்ப்பது நல்லது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button