27 1422358153 strawberrymintjuice
ஆரோக்கிய உணவு

சுவையான ஸ்ட்ராபெர்ரி புதினா ஜூஸ்

ஸ்ட்ராபெர்ரி புதினா ஜூஸ் மிகவும் வித்தியாசமான சுவையில் இருக்கும் ஒரு அற்புதமான புத்துணர்ச்சியூட்டும் ஜூஸ். தற்போது ஸ்ட்ராபெர்ரி அதிகம் கிடைப்பதால், ஸ்ட்ராபெர்ரியை எப்போதும் போல் மில்க் ஷேக் செய்து குடிக்காமல், வித்தியசமாக புதினாவுடன் சேர்த்து ஜூஸ் செய்து குடித்து பாருங்கள்.

நிச்சயம் இந்த ஸ்ட்ராபெர்ரி புதினா ஜூஸ் உங்களை புத்துணர்ச்சியூட்டும். சரி, இப்போது ஸ்ட்ராபெர்ரி புதினா ஜூஸை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Strawberry Mint Juice Recipe
தேவையான பொருட்கள்:

ஸ்ட்ராபெர்ரி – 15
புதினா – 1/2 கப்
சர்க்கரை – 3 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை ஜூஸ் – 2 டீஸ்பூன்
ஐஸ் தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஸ்ட்ராபெர்ரியில் உள்ள இலையை நீக்கி, மிக்ஸியில் போட்டுக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் புதினா, எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரையை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மிக்ஸியை மூடி நன்கு மென்மையாக அரைத்து, டம்ளரில் ஊற்றிப் பரிமாறினால், ஸ்ட்ராபெர்ரி புதினா ஜூஸ் ரெடி!!!

Related posts

தயிர் தினமும் சாப்பிடுவதால் ஆயுள் அதிகரிக்குமா?தெரிந்துகொள்வோமா?

nathan

உடல் ஆரோக்கியம் பாழாகாமல் இருக்க சாப்பிட வேண்டிய ஆரோக்கிய உணவுகள்

nathan

ப‌ச்சை ‌மிளகாயை பாதுகா‌க்க

nathan

கோடையில் கவனம் தேவை… இந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்

nathan

வெள்ளை சக்கரையில் இவ்வளவு ஆபத்து இருக்கா?

nathan

இரத்த நாளங்களில் தேங்கியிருக்கும் தீயக் கொழுப்பை நீக்க உதவும் சிறந்த உணவுகள்!!!

nathan

புதிய பழங்கள்… அரிய பலன்கள்…

nathan

சின்ன வெங்காயத்தை இப்படி சாப்பிட்டா தொப்பை கட கடனு குறையும்!

nathan

மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும் முள்ளங்கி சூப்! தெரிஞ்சிக்கங்க…

nathan