26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
Fennel S
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா இந்த ஒரே ஒரு மூலிகை தண்ணீர் போது உடல் எடையை சீக்கிரமாக குறைக்க!

சோம்பு அன்றாட சமையலுக்கு அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய பொருள் ஆகும். இதில் இரும்பு சத்தும், மங்கனீசிய சத்தும் நிறைந்து உள்ளன.

இரும்புச் சத்து அதிகம் உள்ளதால் பிராண வாயுவை நம் உடலில் உள்ள செல்களுக்கு அளித்து புத்துணர்ச்சியளிக்கின்றது.

குறிப்பாக சீரகத் தண்ணீரை பயன்படுத்தி நீங்கள் தாராளமாக உடல் எடையை குறைக்க முடியும். தற்போது இதனை எப்படி உடல் எடையை குறைக்க எடுத்து கொள்ளலாம் என்பதை பார்ப்போம்.

எப்படி எடுத்து கொள்ளலாம்?

முதல் நாள் இரவு சோம்பை போட்டு தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். ஒரு ஐந்து நிமிடம் கொதித்ததும் தண்ணீரை இறக்கிவிடலாம். பின்னர் நன்றாக ஆறியதும் அந்த தண்ணீரை பயன்படுத்தலாம். ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டு ஸ்பூன் சோம்பு வரை போட வேண்டும்.

கூடுதல் அரோமா தேவைப்பாட்டால் வெறும் பாத்திரத்தில் சோம்பை வறுத்துக் கொள்ளுங்கள். இது கூடுதல் சுவையை அளிக்கும்.

எவ்வளவு குடிக்கலாம் ?

ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு லிட்டர் நீராவது குடிக்க வேண்டும். அதாவது சோம்பு போட்டு கொதிக்க வைத்த நீர் மட்டும் ஒரு லிட்டர். இது செரிமானத்தையும் சீராக்குவதால் உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.

நன்மைகள்

சோம்பு எப்போதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவிடும். சர்க்கரையை அதிகமாக உடல் சேர்க்க அனுமதிக்காது. இதன் காரணமாக சர்க்கரை உணவுகள் அதிகமாக எடுத்துக் கொள்வது தவிர்க்கப்படும்.

சீரகத்தண்ணீர் தொடர்ந்து குடித்தால் அது உங்கள் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும்.

சோம்புத்தண்ணீர் தொடர்ந்து குடித்து வந்தால் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கிடும். இதனால் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைக்கப்பெறும். அதோடு உடல் எடையும் கணிசமாக குறைந்திடும்.

சோம்புத்தண்ணீர் குடிப்பதால் பசியுணர்வு அதிகரிக்காது. இதனால் தேவையின்றி உணவுகள் உட்கொள்வது குறையும்.

சோம்புத்தண்ணீ ர் உங்கள் ரத்தத்தை சுத்திகரிக்கும் ஆற்றல் கொண்டது. இதனால் செரிமாணம் வேகமாக நடைபெறும். அதோடு இது நச்சுக்களையும் நீக்குவதால் உடல் எடை வேகமாக குறைந்திடும்.

தொப்பை வருவதற்கு முக்கிய காரணம் உணவுகள் சரியாக செரிமானம் ஆகாமல் கீழ் வயிற்றில் சேருவது தான். அவற்றை சோம்புத்தண்ணீர் குடிப்பதால் நீக்கிடலாம் என்பதால் தொப்பை குறைந்திடும்.

சோம்புத்தண்ணீர் குடிப்பதனால் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

Related posts

30 நாட்கள் இஞ்சியை எடுத்துக்கொண்டால் நடக்கும் அற்புதம்-தெரிஞ்சிக்கங்க…

nathan

கீரையை தினமும் எந்தளவு சாப்பிட வேண்டும் தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

பப்பாளி விதையுடன் கொஞ்சம் தேன் கலந்து சாப்பிட்டால் இத்தனை நன்மையா? தெரிஞ்சிக்கங்க…

nathan

டீ முதல் ஐஸ்க்ரீம் வரை சீனித் துளசியில் ருசிக்கலாமா?

nathan

அடேங்கப்பா! எலுமிச்சை பழத்தில் இவ்வளவு நன்மைகளா ??

nathan

மீன் உணவு… இதயத்துக்கு இதம், உடலுக்கு பலம், மனதுக்கு நலம்!

nathan

ரவை சிக்கன் பிரியாணி

nathan

சூப்பரான முருங்கைக்கீரை சாம்பார்

nathan

ஆண்களின் உடல் சக்தியை அதிகரிக்க உதவும் ஆறு வகையான தேநீர்!!!

nathan