மருத்துவ குறிப்பு (OG)

சீரற்ற மாதவிடாயா உங்களுக்கு? இதை படியுங்கள்

மாதவிடாய் மாறுதல்கள் ஏன்?

மாதராய் பிறந்தாலே மாதவிடாய் கோளாறுகளில் சிக்கித்தான் ஆக வேண்டியுள்ளது. பெண்கள் இதனால் படும்பாடுகள் ஏராளம். இந்தக் கோளாறுகள் ஒவ்வொருடைய மனநிலையை பொருத்தும் மாறுப்படுகின்றன. அன்றாடவாழ்க்கையில் பெண்கள் பல்வேறு வேலைகளையும், மன உளைச்சல்களையும் தாங்க வேண்டியுள்ளது. இதனால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.

தாமதமான மாதவிடாய்

சில பெண்களுக்கு பருவம் அடைந்த பின்பும் முதல் மாதவிடாய் வராமல் தாமதமாகலாம். மாதவிடாயின் போது இரத்தப்போக்கிற்கு பதில் வெள்ளைப்படுதல் இருக்கலாம்.

காலதாமதமான மாதவிலக்கிற்குக் காரணங்கள் :

உடல் நலக்குறைவு

அதிக பயம்

மனம் சார்ந்த கோளாறுகள்

இரத்த சோகை

சுரப்பிக் கோளாறுகள்

போன்ற பல காரணங்கள் இருக்கலாம். பருவ காலங்களில் சில பெண்கள் முகப்பருவினால் அவதியுருவர். இதனால் தாழ்வு மனப்பான்மை போன்ற கோளாறுகள் ஏற்படும். இவற்றிற்கெல்லாம் நிரந்தர தீர்வுகள் உள்ளன.

சிலருக்கு மாதவிலக்கு சமயங்களில் மிகக் குறைந்த அளவு இரத்தப்போக்குடன் வயிற்று வலியும் இருக்கும். மாறாக சிலருக்கு அதிகமான ரத்தப்போக்கு இருக்கும். மாதவிடாய் சுழற்சி சரியில்லாமல் மாதத்திற்கு இரண்டுமறை கூட வருவதுண்டு.

இரத்தம் கட்டிகட்டியாகவும் படும். சிலருக்கு மாதவிலக்கு காலங்களில் வலி கடுமையாக இருக்கும். வலி தாளாமல் மயக்கம் கூட வருவதுண்டு. சிலருக்கு வாந்தியும் இருக்கும். வயிற்று வலியால் வலிப்பு கூட ஏற்படலாம்.28 1406523054 10menstruation

வெள்ளைப்படுதல்

சில பெண்களுக்கு வெள்ளைப் படுதல் ஏற்படும். வெள்ளைப்படுதல் என்பது நோயல்ல. சில நேரங்களில் வெள்ளைப்படுதல் இயற்கையானதும், தேவையானதும் கூட, ஆனால் துர்நாற்றத்தோடு கூடியதாக இருந்தால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

வெள்ளைப்படுவது மாதவிலக்கிலும் மூன்று நாட்கள் முன்போ அல்லது சினை முட்டை உருவாகும் காலங்களில் அதாவது மாதவிலக்கிலிருந்து பதினான்காவது நாலில் இருப்பதோ இயற்கை.

காரணங்கள்

உள்ளாடையில் சுத்தமின்மை

உள்ளுறுப்புகள் மற்றும் கர்ப்பப்பை புண்

அழற்சி

புற்று

பால்வினை நோய்கள்

போன்றவை முக்கியமான சில காரணங்கள்.

இயற்கையாக இருக்கக் கூடிய நாட்கள் தவிர, மற்ற நாட்களில் பிறப்புறுப்புகளில் அரிப்பு, இடுப்பு வலியுடன் கூடிய வெள்ளைப்போக்கிற்கு சிகிச்சை பெறுவது அவசியம்.

பெண் மலட்டுத்தன்மைக்கான காரணங்கள்

அதீத ரத்த சோகை

சத்துள்ள உணவு இல்லாமை

பொதுக் காரணங்கள்

சுரப்பிக் குறைப்பாடுகள்

கர்ப்பப்பை வளர்ச்சி

அமைப்பு குறைப்பாடுகள்

யோனியில் சதை அடைப்பு

மாதவிடாய் நிற்கும் காலம்

ஈஸ்ட்ரோஜன் என்ற சுரப்பு குறைவினால் சில தொந்தரவுகள் ஏற்படுகின்றன. படபடப்பு, வியர்வை, கோபம், மூட்டு வலி போன்ற உடல் மற்றும் மனநலக்கோளாறுகள் ஏற்படுகின்றன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button