28.8 C
Chennai
Monday, Jul 14, 2025
c7ea784bb7bf81a7e2fcd
ஆரோக்கிய உணவு

வீட்டிலேயே சுவையான அரிசி அப்பளம் செய்யலாம்?

மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு சாதத்துடன் அப்பளம் ஒன்று இருந்தாலே போதும் சுவையாக இருக்கும்.

இதனை எண்ணெயில் பொறித்து எடுத்து மொறு மொறுப்பாக தனியாக சாப்பிட்டாலும் சுவையாக தான் இருக்கும்.

அரிசி, உருளைக்கிழங்கு, ஜவ்வரிசி மற்றும் உளுந்தம் பருப்பு கொண்டு பல்வேறு முறையாக இந்த அப்பளத்தை தயாரிப்பார்கள்.

இதனை தமிழ்நாட்டில் அப்பளம் என்றும், ஆந்திராவில் அப்படம் என்றும், கர்நாடகாவில் ஹப்பாலா என்றும் கூறுவார்கள். இந்த பிரபலமான அரிசி அப்பளத்தை எவ்வாறு செய்யலாம் என்று பார்ப்போம்.

முக்கிய பொருட்கள்

1 கப் அரிசி மாவு
1 தேக்கரண்டி சீரக விதைகள்
தேவையான அளவு பெருங்காயம்
1/2 தேக்கரண்டி எள் விதை
தேவையான அளவு உப்பு
2 கப் நீர்
அரிசி மாவு, சீரகம், பெருங்காயம், எள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அனைத்து பொருட்களையும் நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். கட்டி விழாதவாறு நன்கு பிசைய வேண்டும்.

இட்லி தட்டில் சிறிது எண்ணெய் சேர்த்து அதில் பிசைந்த மாவை தட்டில் வைத்து 10 -15 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்

அதன் பின்பு வேக வைத்த மாவை எடுத்து சூரிய ஒளியில் 2 -3 நாள்கள் உளர வைக்க வேண்டும்..

நன்கு உளர்ந்த பிறகு அதனை எண்ணெயில் பொறித்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

Related posts

தெரிஞ்சிக்கங்க…துரியன் பழம்: சுகாதார நன்மைகள், ஊட்டச்சத்து, தோல் மற்றும் கூந்தலுக்கான பயன்பாடுகள்..!!!

nathan

நடக்கும் அதிசயம்!காலை எழுந்தவுடன் இந்த பொருளை சாப்பிட்டால் போதும் !

nathan

சத்தான சுவையான சப்ஜா குல்கந்து பால்

nathan

மாம்பழத்தின் மருத்துவ குணங்கள்

nathan

விக்கலால் அவதிப்படுகிறீர்களா?சூப்பரா பலன் தரும்!!

nathan

காலை மடக்கி உட்கார்ந்து சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? தெரிந்துகொள்வோமா?

nathan

உங்களுக்கு தெரியுமா எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் பயன்கள்!!

nathan

சத்தான வெஜிடபிள் பணியாரம்

nathan

சப்பாத்தி-வெஜிடபிள் குருமா!

nathan