36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கிய உணவு

வீட்டிலேயே சுவையான அரிசி அப்பளம் செய்யலாம்?

மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு சாதத்துடன் அப்பளம் ஒன்று இருந்தாலே போதும் சுவையாக இருக்கும்.

இதனை எண்ணெயில் பொறித்து எடுத்து மொறு மொறுப்பாக தனியாக சாப்பிட்டாலும் சுவையாக தான் இருக்கும்.

அரிசி, உருளைக்கிழங்கு, ஜவ்வரிசி மற்றும் உளுந்தம் பருப்பு கொண்டு பல்வேறு முறையாக இந்த அப்பளத்தை தயாரிப்பார்கள்.

இதனை தமிழ்நாட்டில் அப்பளம் என்றும், ஆந்திராவில் அப்படம் என்றும், கர்நாடகாவில் ஹப்பாலா என்றும் கூறுவார்கள். இந்த பிரபலமான அரிசி அப்பளத்தை எவ்வாறு செய்யலாம் என்று பார்ப்போம்.

முக்கிய பொருட்கள்

1 கப் அரிசி மாவு
1 தேக்கரண்டி சீரக விதைகள்
தேவையான அளவு பெருங்காயம்
1/2 தேக்கரண்டி எள் விதை
தேவையான அளவு உப்பு
2 கப் நீர்
அரிசி மாவு, சீரகம், பெருங்காயம், எள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அனைத்து பொருட்களையும் நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். கட்டி விழாதவாறு நன்கு பிசைய வேண்டும்.

இட்லி தட்டில் சிறிது எண்ணெய் சேர்த்து அதில் பிசைந்த மாவை தட்டில் வைத்து 10 -15 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்

அதன் பின்பு வேக வைத்த மாவை எடுத்து சூரிய ஒளியில் 2 -3 நாள்கள் உளர வைக்க வேண்டும்..

நன்கு உளர்ந்த பிறகு அதனை எண்ணெயில் பொறித்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

Related posts

நீங்கள் காலை உணவு சாப்பிடாதவர்களா அப்படின்னா இதை படிங்க!

nathan

பால் பற்றிய அதிர்ச்சிகரமான உண்மைகள்: மிஸ் பண்ணிடாதீங்க!!

nathan

தெரிஞ்சிக்கங்க…மூல நோய் முதல் நீரிழிவு நோய் வரை தலை தெறிக்க ஓட விடும் குட்டி குட்டி விதைகள்!!!

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க… ஆரோக்கியத்தைக் காக்க கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்கள்!!!

nathan

நல்ல தேனை கண்டறிவது எப்படி?

nathan

வெரிகோஸ் வெயின் குணமாக

nathan

வெண்டைக்காய் ஊற வைத்த நீரைப் பருகுவதால் பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா?

nathan

கட்டாயம் இதை படியுங்கள் டர்னிப்பின் கிழங்கும், இலைகளும் ஆயுள் முழுவதும் ஆரோக்கியம்!

nathan

சூப்பர் டிப்ஸ் கொண்டைக்கடலை புளிக்குழம்பு

nathan