36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
மருத்துவ குறிப்பு

உங்கள் கைரேகை இப்படி இருக்கிறதா? அப்படின்னா நீங்க கோடீஸ்வரர் தான்!

எந்தக் கிரகம் கெட்ட இடத்தில் இருந்தாலும், அந்த இடத்தை குரு பார்க்க நேரிட்டால், அந்த கெட்ட தோஷம் அடியோடு விலகிவிடும்.

நவக்கிரகங்களில் மேலான வலு பெற்று விளங்குபவர் குரு பகவான். அரசன் என்றும், ஆசான் என்றும் வர்ணிக்கப்படும் குரு பகவான், பிரம்மாவின் பேரன் என்று புராணம் கூறுகிறது. குரு பலம் தான் திருமணம் போன்ற மங்களகரமான காரியங்களுக்கு அடிப்படை.

இந்த குருவும், கேதுவும் இணைந்து ஒருவர் ஜாதகத்தில் அமைந்திருந்தால், அந்த ஜாதகர் பாக்கியசாலியாக திகழ்வார். மேலும் அந்த நபர் என்றாவது ஒருநாள் கோடீஸ்வரராக விளங்குவார் என்கிறது ஜோதிடம்

ரிஷபம் லக்னமாக அமைந்து, பாக்கிய ஸ்தானமான 5-ம் வீட்டில், அதாவது கன்னி ராசியில் குருவும், கேதுவும் இணைந்திருந்தால், அந்த ஜாதகர் கோடீஸ்வரராவது உறுதி. குருவுக்கு இது மிகுந்த பலமான இடமாகும்.

இந்த யோகம் அமைந்த ஜாதகர், 45 வயதுக்கு மேல் பெரிய பதவி வகித்துக் கொண்டிருப்பார். ஒருவரின் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு உத்தரவாதம் அளிக்கும் இடம் இது.

இனி கைரேகை சாஸ்திரப்படி கோடீஸ்வர யோகம் யாருக்கு அமையும் என்பதைப் பார்க்கலாம்.

நடுவிரல் என்றும், சனி விரல் என்றும் அழைக்கப்படும் விரலின் அடிப்பாகத்தில் அமைந்திருப்பது சனி மேடு என்று அழைக்கப்படுகிறது. இந்த சனி விரலின் கீழ் காணப்படும் வட்டத்துக்கு ‘சனி வளையம்’ என்று பெயர்.

ஒருவரின் கையில் நடுவிரலில் சனி வளையம் அமைந்து, அந்த வளையத்தில் இருந்து சிறு ரேகைகள் மேல் நோக்கிச் செல்ல, அதே சமயம் விதி ரேகை என்னும் ரேகை கங்கண ரேகையில் இருந்து எந்த குறுக்கு வெட்டும் இல்லாமல் நேராக சனி விரலை தொட்டு நின்றாலோ அல்லது சனி மேட்டில் முட்டி நின்றாலோ அதை ‘கோடீஸ்வர யோகம்’ என்கிறது கைரேகை சாஸ்திரம்.

இந்த அமைப்பு எல்லோர் கையிலும் அமைய வாய்ப்பில்லை. அபூர்வமாக ஒரு சிலருக்கே இந்த யோகம் அமைகிறது. இவ்விதம் ரேகை அமைந்தவர்கள் கோடீஸ்வரராக மாறுவது நிச்சயம்.

Related posts

அதிகம் தூங்கினாலும் ஆபத்து!

nathan

தவறான உறவால் வாழ்க்கையை இழக்கும் பெண்கள்

nathan

மாதவிடாய் சுழற்சி காலத்தில் நேப்கின்களால் ஏற்படும் அரிப்பைத் தடுக்கும் சில வழிகள்!

nathan

உங்க உடம்புல இருக்கும் கெட்ட கொழுப்ப குறைக்கணுமா?

nathan

உறவில் விரிசல்: களையவேண்டிய பத்து காரணங்கள்!

nathan

தெரிந்துகொள்ளுங்கள் ! ஏலக்காயில் அடங்கியிருக்கும் நன்மைகள் இவ்வளவா?..

nathan

தினமும் பல மணிநேரம் சூயிங் கம் மென்ற பெண்ணின் அவல நிலை!!!

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த அன்றாடம் பின்பற்ற வேண்டிய 8 பழக்கங்கள்!

nathan

மூளை எப்படி நினைவுகளை சேமிக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா -தெரிஞ்சிக்கங்க…

nathan