31.4 C
Chennai
Saturday, Jun 1, 2024
ault 1
ஆரோக்கிய உணவு

தெரிந்துகொள்வோமா? இட்லி – சாம்பார் எடையை குறைக்க உதவுமா? எப்படி ?

பொதுவாக ஆவியில் வேகவைத்து உண்ணக்கூடிய இட்லி எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவாகும். அதனால் தான் பெரியவர்கள் வரை சிறியவர்கள் வரை ரசித்து ருசித்து சாப்பிடுகின்றார்கள்.

காலை நேர உணவாக இட்லி சாப்பிடுவது தான் நல்லது என்றும் அது தான் ஆரோக்கியம் என்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதுமட்டுமின்றி இது உடல் எடையை குறைக்க உதவி புரிகின்றது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றார்கள். தற்போது அது உண்மையா என்று தெரிந்து கொள்வோம்.

எப்படி உடல் எடையை குறைக்க உதவுகின்றது?

இட்லி எண்ணையிலோ அல்லது மசாலாக்கள் கலந்தோ வறுக்கப்படுவதில்லை. ஆவியில் மட்டுமே வேகவைக்கப்படுகிறது. இட்லியில் வெண்ணெய் அல்லது கொழுப்பு எண்ணெய் போன்ற எதுவும் இல்லை. மேலும், இட்லியில் எண்ணெய் இல்லாததால், அதில் உள்ள கலோரி குறைவாகவே இருக்கும்.

இட்லிக்கு தொட்டுக் கொள்ளக் கூடிய சாம்பரில் நார்ச்சத்து, புரதச் சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது செரிமானத்தை மேம்படுத்துவதோடு, எடை இழப்புக்கு உதவுகிறது. சாம்பாரில் சேர்க்கப்படும் காய்கறிகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

நன்மை என்ன? 

 

  எப்படி எடுத்து கொள்ளலாம்? 

 

  •   உங்கள் உடலில் கார்போ ஹைட்ரேட்டுகள் படிவதைத் தடுக்க இட்லி மாவில் சிறிது எலுமிச்சை சாறு அல்லது சிட்ரஸ் சாறை சேர்த்துக் கொள்ளலாம். அதேபோல் இட்லி மாவில் ஓட்ஸ் சேர்த்தும் சமைத்து உண்ணலாம் .
  • ஏனெனில், ஓட்ஸில் புரதச் சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது உங்களுக்கு வயிறு நிறைந்தது போன்ற திருப்தியைத் தருவதோடு, நீண்ட நேரம் உங்களை சுறுசுறுப்பாக இருக்க வைக்கும்.
  • இட்லி அரிசியால் ஆனது. அரிசியில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது. அரிசிக்குப் பதிலாக உளுந்தம் பருப்புடன் ரவை சேர்த்து அரைத்து இட்லி செய்யலாம். அத்துடன் இதன் சுவையை அதிகரிக்க இட்லி மாவில் சில நறுக்கிய காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளலாம். இது இட்லியை சுவையாகவும், ஆரோக்கியமாகவும் மாற்ற உதவும்.

Related posts

தொண்டைக்கு இதமளிக்கும் கிராம்பு டீ!

nathan

நீங்கள் அறிந்திக்க வேண்டிய பயன்தரும் வீட்டுக் குறிப்புகள் இதை படிங்க…

nathan

கோவைக்காய்! முள் வேலியில் வளர்ந்து கிடப்பதில் இவ்ளோ பவரா?

nathan

உடலை குளிர்ச்சியாக்கும் புளியந்தளிர்

nathan

ஜாக்கிரதை…!மறந்தும் கூட காலை உணவாக இதை சாப்பிட்டு விடாதீர்கள்!

nathan

நடக்கும் அதிசயம்!காலை எழுந்தவுடன் இந்த பொருளை சாப்பிட்டால் போதும் !

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…ஜிம் செல்லும் முன் சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் வாரத்திற்கு 3 முறை சாப்பிட்டால் போதும்.சூப்பர் டிப்ஸ்….

nathan

ருசியான குலாப் ஜாமூன் செய்ய வேண்டுமா…!

nathan