35.4 C
Chennai
Thursday, Jul 17, 2025
1533289850 867
ஆரோக்கிய உணவு

ருசியான குலாப் ஜாமூன் செய்ய வேண்டுமா…!

தேவையான பொருட்கள்:

பால் – தேவைக்கேற்ப
சர்க்கரை – 2 கப்
பால் பவுடர் – 1 கப்
மைதா – 1/2 கப்
சமையல் சோடா – 1 சிட்டிகை
உருக்கிய வெண்ணெய் – 2 மேசைக்கரண்டி
எண்ணெய் – பொரிப்பதற்கு
ஏலக்காய் – 2 தூள் செய்தது
செய்முறை:

சர்க்கரை பாகு: சர்க்கரை நன்றாக தண்ணீரில் கரையும் வரை சூடு செய்யவும். நன்கு கொதித்து பாகுபதம் (ஜீரா) வந்ததும் இறக்கி வைத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் பால் பவுடர், மைதா, சமையல் சோடா, வெண்ணெய் எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும். இதில் தேவையான அளவு பால் ஊற்றி பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை சிறிது நேரம் அப்படியே வைக்கவும். பிறகு உருண்டையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும், மிதமான சூட்டில் உருண்டைகளைப் போட்டு பொரித்து எடுக்கவும். அடுப்பை மிதமான சூட்டில் வைக்க வேண்டும். குலாப் ஜாமூன் மெதுவாக அடியிலிருந்து மேலே வரவேண்டும். பொன்னிறமானதும் மெதுவாக வெளியே எடுத்து மிதமான சூட்டில் இருக்கும் சர்க்கரைப் பாகில் போடவும். குலாப் ஜாமுனை 2 மணி நேரம் சர்க்கரைப் பாகிலேயே விட்டுவிடவும். பிறகு எடுத்து பரிமாறலாம். ருசியான குலாப் ஜாமூன் தயார்.1533289850 867

Related posts

சர்க்கரை நோய் தூரமா ஓடியே போயிடும்!இந்த விதைய மட்டும் கொஞ்சம் வாயில போட்டு மெல்லுங்க…!

nathan

உலர் திராட்சையில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன.

nathan

தினமும் நெல்லிக்காயை தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

நீங்கள் காலை உணவு சாப்பிடாதவர்களா அப்படின்னா இதை படிங்க!

nathan

உங்களுக்கு தெரியுமா பனங்கிழங்கை இந்தப் பொருளுடன் இப்படி செய்து சாப்பிட்டால் உடலுக்கு தேவையான இரும்பு சத்து கிடைக்கும்…!

nathan

பிரேக் ஃபாஸ்ட் !

nathan

மாதவிலக்கு கோளாறை போக்கும் அவரை

nathan

உணவுக்கு பின் ஐஸ் தண்ணீர் அருந்தகூடாது

nathan

சுவையான சேமியா உப்புமா

nathan