30.1 C
Chennai
Tuesday, Jun 2, 2026
ஆரோக்கிய உணவு

அடிக்கடி தயிர் சாதம் சாப்பிடுபவரா நீங்கள்? கட்டாயம் இதை படியுங்கள்

ஆரோக்கியமாக இருப்பதற்கு பல வழிகளில் தயிர் உதவுகிறது.

தயிர் சாப்பிட்டால் உடம்பு எடை அதிகரிக்கும் என்ற ஒரு விடயம் இருந்தாலும், அதில் உள்ள அதிக புரதச்சத்து காரணமாக உடல் எடை குறையவும் நிறைய வாய்ப்புள்ளது.

தயிர் சாப்பிடும் விஷயத்தில் எவ்வளவு கலோரிகள் வரை நாம் எடுத்துக் கொள்கிறோம் என்பது முக்கியம்.

சில தயிர் பாக்கெட்டுகளில் 100 கலோரிகளும், 6 கிராம் புரதமும் இருக்கும்.

அதற்குப் பதில் அதிக கலோரிகள் இருந்தாலும், 15 கிராம் வரை புரதம் இருக்கும் தயிரைப் பயன்படுத்துதல் நல்லது.

சிலர் பெரிய பாத்திரத்தி லிருந்து சாதத்தை எடுத்துப் போட்டுக் கொண்டு தயிர் சாதம் சாப்பிடுவார்கள்.

இவ்வாறு சாப்பிடுவது சாதாரணமாகவே தோன்றினாலும், உண்மையில் அவர்கள் நிறைய சாப்பிட்டி ருப்பார்கள்.

எனவே அளவோடு தயிர் சாதம் சாப்பிடுதல் நல்லது.

தயிர் சாப்பிடும் போது தேன், தானியம், நட்ஸ், பழங்கள் போன்ற வேறு உணவுப் பொருட்களையும் சேர்த்துக் கொள்வது சிலருக்கு வழக்கம்.

அவற்றையெல்லாம் தவிர்த்து விட்டு அல்லது மிகவும் குறைத்து விட்டு, தயிருக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுங்கள்.

காலை உணவாக இருந்தால் மட்டும், சிறிது நட்ஸ்களை சேர்த்துக் கொள்ளலாம்.

நீங்கள் வாங்கப் போகும் தயிர் பாக்கெட்டுகளில் 18 கிராமுக்கு அதிகமாக சர்க்கரையின் அளவு இருந்தாலோ அல்லது தயிர் பாக்கெட் லேபிளில் சர்க்கரை முதலாவது இடத்தில் இருந்தாலோ அதைத் தவிர்த்து விடுங்கள்.

அது தான் கொழுப்பை அதிகமாக்குகிறது. பதிலாக, புரதம் அதிகமாக இருக்கும் தயிர் பாக்கெட்டுகளை நீங்கள் நாடலாம்.

கடைகளில் விற்கப்படும் தயிரை வாங்கும் போது, அதில் எவ்வளவு கொழுப்பு, எவ்வளவு கலோரி, எவ்வளவு சர்க்கரை என்று பார்த்துப் பார்த்து வாங்க வேண்டியிருக்கும்.

Related posts

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி!

nathan

பஜ்ஜி, போண்டா, கெ.எப்.சி, சிக்கன் 65 அதிகமா சாப்பிட பிடிக்குமா? அப்ப நீங்க இதப் படிச்சே ஆகணும்!

nathan

உங்களுக்கு தெரியுமா காளானை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா…?

nathan

நல்ல தேனை கண்டறிவது எப்படி?

nathan

சமைக்காமலே சாப்பிடலாம்!

nathan

உடல் பலம் பெற சாப்பிட வேண்டிய உணவுகள்!

nathan

உடலை குளிர்ச்சியாக்கும் அகத்திக்கீரை தேங்காய்பால்

nathan

கவுனி அரிசி உருண்டை

nathan

நீரிழிவு நோயாளிகள் காலையில் வெறும் வயிற்றில் டீ குடித்தால் உயிருக்கு ஆபத்து…. தெரிந்துகொள்ளுங்கள் !

nathan