ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க…எடையைக் குறைத்து அழகை உயர்த்தும் உன்னத வழிமுறைகள்!!!

அழகான உருவத்தைப் பெறுவது ஒவ்வொருவரின் கனவாக இருக்கும். அதிலும் குண்டாக இருப்பவர்கள் தங்களுடைய உருவத்தை மாற்றி, மெலிதான அழகிய தேகத்தைப் பெற மிகவும் முயற்சி செய்வார்கள். ஒரே நாளில் உங்களுடைய வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வது தான் ஒல்லியாக இருப்பதற்கான வழி என்று சொல்ல முடியாது.

உண்மையில், பொருத்தமான சிறிய மாற்றங்களும் கூட உங்களுடைய எடை குறைப்பு முயற்சியில் பெருத்த மாற்றங்களைக் கொண்டு வரும். இங்கே தரப்பட்டிருக்கும் வழிமுறைகளைப் பின்பற்றி நீண்ட நாட்களுக்கு பயன் பெறுங்கள்.

வேண்டும் சுறுசுறுப்பு

ஒரு காஸ்ட்லி ஜிம்மிற்கு செல்ல வேண்டும் என்பதோ அல்லது தனியாக ஒரு பயிற்சியாளரை நியமித்துக் கொள்ளுங்கள் என்பதோ எளிய அறிவுரையாக இருக்க முடியாது. ஆனால், செய்யும் வேலையின் வேகத்தை அதிகப்படுத்துங்கள். ஒவ்வொரு நாளும், வாரமும் நீங்கள் செய்யும் வேலையின் அளவையும், வேகத்தையும் உயர்த்திக் கொண்டே வாருங்கள். மாற்றத்தைக் காண முடியும்.

நடை இருக்க… கார் எதற்கு?

உங்கள் குழந்தையுடன் வாக்கிங் செல்வதோ அல்லது வேலை செய்யும் இடத்திலிருந்து சற்றுத் தள்ளி காரை நிறுத்தி விட்டு நடந்து செல்வதோ – எதுவாக இருந்தாலும், இந்த சிறிய மாற்றத்திற்கான செயல்பாட்டை தினமும் செய்து வந்தால், உடல் எடையிலும் – உருவத்திலும் மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்பதை மறந்து விடாதீர்கள்.

புதிய பழக்கவழக்கங்கள்

உடல் எடையை நீண்ட காலத்திற்கு வெற்றிகரமாக குறைக்க உணவு முறையில் மாற்றம் கொண்டு வருவது மட்டும் போதாது, மாறாக ஆரோக்கியமான புதிய பழக்கவழக்கங்களை வாழ்க்கை முழுவதும் பின்பற்ற வேண்டும். இவை உங்களுடைய வாழ்வுடன் ஒன்றி விடுவதால், எப்படி செய்கிறீர்கள் என்பதையும் கூட மறந்து, தொடர்ந்து பழகி விடுவீர்கள். இவை தான் ‘புதிய பழக்கங்களை அடைதல்’ என்று சொல்ல முடியும்.

சிறிய இலக்குகள்

எடையைக் குறைப்பதென்பது ஒரு வாழ்க்கை முறை மாற்றமேயன்றி, உடனே தொடங்கி முடிந்து விடும் ஓட்டப்பந்தயம் அல்ல! நீங்கள் மிகவும் அதிகமான அளவில் எடையை குறைக்க வேண்டியிருக்கும் போது, முடிவான குறிக்கோள்களை எண்ணிப் பார்ப்பது மலைப்பான விஷயமாக இருக்கலாம். எனவே, உங்களுடைய எடை குறைப்பு திட்டத்தை, எளிதில் அடையக் கூடிய வகையில் சிறு சிறு இலக்குகளாக பிரித்துக் கொள்ளுங்கள்.

அதாவது இந்த வாரத்தில் எவ்வளவு எடையை குறைக்க முடியும் அல்லது ஒரு கிலோ எடையை எவ்வளவு காலத்திற்குள் குறைக்கலாம் என்று திட்டமிடுங்கள். விரைவிலேயே நீங்கள் இதனை திரும்பிப் பார்க்கும் போது, எவ்வளவு தூரம் வந்துள்ளோம் என்பதை அறிவீர்கள்!

திட்டமிட்ட உணவு

உங்கள் வீட்டு ஃபிரிட்ஜில் உணவுகள் இல்லாத போது, அலமாரிகள் உங்களை பசியில் தவிக்க விட்டு உணவுகள் இல்லாத போது, வேகமாக எதையாவது சாப்பிட்டு பசியாற வேண்டும் என்பதே நோக்கமாக இருக்கும். ஆனால், சமைப்பதற்கு முன்னரே உங்களுக்கான உணவைப் பற்றி முறையாகத் திட்டமிட்டு, நெருங்கிச் செல்வது உணவையும், பணத்தையும் சேமிக்க உதவும். கடைக்கு செல்வதற்கு முன்னரே, எதை வாங்க வேண்டும் என்ற பட்டியலைத் தயார் செய்வது மிகச்சிறந்த யோசனையாக இருக்கும். இவ்வாறு செய்யும் போது, வேறு எதையும் வாங்க வேண்டும் என்ற எண்ணம் வருவதும் தவிர்க்கப்படும்.

தேவை ஒரு துணை

தனியாக எடை குறைப்பு முயற்சிகளை மேற்கொள்பவர்களை விட, ஒரு குழுவாக அல்லது நண்பர்களுடன் சேர்ந்து முயற்சி செய்பவர்கள் மிகவும் வெற்றிகரமாக தங்களுடைய இலக்குகளை அடைவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

குடும்பத்துடன் உணவருந்துங்கள்

நாம் உணவுக்கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கும் போது, குடும்பத்தினருடன் சேர்ந்து சாப்பிடாமல், தனியாக சாப்பிடவே விரும்புவோம். ஆனால், குடும்பத்தினருடன் சேர்ந்து சாப்பிடும் போது, ஒரு சாலட்டை சாப்பிட வேண்டும் என்ற ஆசை வந்தால் கூட, சாப்பிடாமல் கட்டுப்படுத்திக் கொள்வோம். ஏனெனில், உங்களுடைய உணவுக் கட்டுப்பாட்டு திட்டம் அவர்களுக்கும் தெரியுமல்லவா!

அதே நேரம், உங்களுடைய உணவில் சிற்சில மாற்றங்களை செய்தால், குடும்பத்தினருடன் சேர்ந்தும் கூட உங்களுக்குப் பிடித்தமான உணவுகளை சாப்பிட முடியும. உதாரணத்திற்கு, குழம்பிலிருந்து ஸ்பாகெட்டி போலோக்னீஸ்-ஆக மாற்றிக் கொண்டால், குடும்பத்திலுள்ள அனைவரும் ஆரோக்கியமான உணவுகளால் பலன் பெறுவார்கள்.

டிவி முன் சாப்பிடாமல் டேபிளில் அமர்ந்து சாப்பிடுங்கள்

சாப்பிடும் போது நமது கவனம் சிதறினால், நமக்கே தெரியாமல் தேவைக்கும் அதிகமாக சாப்பிட்டு விடுவோம். இவ்வாறு செய்வதால் பசி குறைந்த உணர்வையும் கூட கவனிக்க மறந்து, வேகமாக சாப்பிட்டு விடுவோம். எனவே, குடும்பத்தினருடன் அமர்ந்து உணவை சாப்பிடும் போது, உணவில் மட்டும் கவனத்தை செலத்துவோம். டிவியைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்.

ஊக்கம் வேண்டும்

வேறொருவருடைய வெற்றியைப் பார்த்து மனம் வெம்பியிருப்பதை விட, உங்களுக்குத் தேவையற்ற எடையைக் குறைக்கும் வகையில் ஊக்கம் பெறுவதே நல்ல பலன் தரும். நேர்மறை எண்ணங்களுடன், ‘அந்த மனிதனைப் போல் நான் ஆக வேண்டும் என்றால், முதலில் என்ன செய்ய வேண்டும்? அவனிடமிருந்து நான் எதைக் கற்றுக் கொள்ள வேண்டும்?’ என்ற கேள்விகளை எழுப்பிப் பாருங்கள். முடிந்தால், அந்த மனிதரின் ஆதரவையும் கோரிப் பெற்றிடுங்கள்.

ரோஜர் பானிஸ்டர் என்பவர் 4 நிமிடத்தில் ஒரு மைல் தூரத்தை முதன்முதலில் ஒடிக் கடந்த போது, அவருக்குப் பின்னர் 37 பேர் இதை செய்வார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

தன்னம்பிக்கையின் சக்தி

நமக்குத் தான் தெரியும் நம்முடைய மோசமான செயல்பாடுகள் என்ன என்று. நம்முடைய மோசமான செயல்பாடுகளில் கவனத்தைச் செலுத்துவது மிகவும் எளிதான விஷயமாகும். ஆனால், மோசமான விஷயங்களை விட, நமது வெற்றிகளில், தன்னம்பிக்கையுடன் கவனம் செலுத்துவது மட்டுமே பின்நாட்களில் வெற்றியைத் தரும். எனவே, இதை முயற்சி செய்து பாருங்களேன் — நீங்கள் தவறாகச் செய்த காரியத்தைப் பற்றி உங்களை நொந்து கொள்வதற்குப் பதிலாக, நெருங்கிய நண்பர் ஒருவருடன் பேசுவதாக நினைத்துக் கொண்டு உங்களுக்குள்ளே பேசுங்கள். சிந்தித்துப் பாருங்கள். நம்பிக்கையை ஊட்டும் நண்பன் உங்களுக்குள் மட்டுமே இருக்கிறான். அந்த தன்னம்பிக்கை என்ற நண்பனைத் தட்டியெழுப்பி, குறிக்கோளை அடைய பாடுபடுங்கள்.

தேர்ந்தெடு!

சைனீஸ், இந்திய அல்லது மீன் மற்றும் சிப்ஸ் என எதுவாக இருந்தாலும், உங்களுக்குப் பிடித்தவைகளை நீங்கள் மறக்க மாட்டீர்கள். ஆனால், உங்களுடைய எடை குறைப்பு முயற்சிக்கு உதவியாக இருக்கும் வகையில், உங்களுக்குத் தேவையான உணவை நீங்களே சமைக்கத் தொடங்குங்கள். இவை உங்களுடைய இடுப்பின் சுற்றளவைக் குறைக்க உதவுவதுடன், வங்கி இருப்பு வீதம் குறையாமலும் பாதுகாக்கும்.

இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button