31.9 C
Chennai
Friday, Jul 26, 2024
625.500.560.350.160.300.053. 11
ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிஞ்சிக்கங்க…யார் யாரெல்லாம் வெந்தயத்தை முளைகட்ட வைத்து சாப்பிட வேண்டும்?

தமிழ் பாரம்பரிய சமையலில் மிக முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் மசாலாப் பொருள்களில் வெந்தயமும் ஒன்று.

இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.

குறிப்பாக வெந்தயத்தை அப்படியே சாப்பிடுவதைக் காட்டிலும் முளைக்கட்ட வைத்து சாப்பிடுவதால் அதன் பலனை அதிகமாகப் பெற முடியும் . அதுபற்றி விளக்கமாகத் தெரிந்து கொள்ளலாம்.

இரவு முழுக்க ஊற வைத்து முளைகட்ட வைத்து சாப்பிடும் வெந்தயத்தில் மிக அதிக அளவில் புரதச்சத்தும் வைட்டமின் சியும் அடங்கியிருக்கின்றன.

அதோடு இரும்புச்சத்தும் பொட்டாசியமும் வெந்தயத்தில் மிக அதிக அளவில் இருக்கிறது.

மேலும் நியாசின் போன்ற நுண் ஊட்டச்சத்துக்களும வெந்தயத்தில் நிறைந்து காணப்படுகின்றன.

 

625.0.560.370.180.700.770.800.668.160.89

 

யாரெல்லாம் வெந்தயத்தை முளைகட்ட வைத்து சாப்பிட வேண்டும்

 

  • வெந்தயம் கசப்புத் தன்மை கொண்டதாக இருக்கும். முளைகட்ட வைத்து, குறிப்பாக ஒரு இன்ச் அளவுக்கு முளைகட்ட வைத்தபின்பு சாப்பிடும்போது வெந்தயம கசக்காது. அது இனிப்புச் சுவை கொண்டதாக மாறிவிடும். அதனால் தாராளமாக வெந்தயத்தை முளைகட்ட வைத்து சாப்பிடலாம்.
  • குறிப்பாக டைப் 2 நீரிழிவு உள்ளவர்கள் தொடர்ந்து 3 மாதங்கள் வெந்தயம் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை முழுமையாகக் கட்டுக்குள் வரும். அதில் உள்ள அமினோ அமிலங்கள் இனசுலின் சுரப்பை துரிதப்படுத்தும்.
  • வெள்ளைப்படுதலுக்கு மிகச்சிறந்த தீர்வாக வெந்தயம் இருக்கும்.
  • வெந்தயத்தை எண்ணெய் சேர்க்காமல் லேசாக வறுத்துப் பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இதை தொடர்ந்து காலையும் இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாகவும் வெந்நீரில் கலந்து குடித்து வர வெள்ளைப்படுதல் நிற்கும்.
  • வெந்தயம் இதயத்தைப் பாதுகாக்கும் கவசம் என்று கூட சொல்லலாம்.
  • இதய ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. தினமும் வெந்தயத்தை உணவில் சேர்த்துக் கொண்டால் இதய வால்வுகளில் கொலஸடிரால் படியாமல் பார்த்துக் கொள்ளும். ரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதோடு கொலஸட்ராலைக் குறைக்கவும் செய்யும்.
  • முளைகட்டிய வெந்தயத்தில் galactagogou என்னும் வேதிப்பொருள் உள்ளதால் இது பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகச்சிறந்த வரப்பிரசாதமாக அமையும்.
  • தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். அதனால் பாலூட்டும் பெண்கள் தினமும் ஒரு ஸ்பூன் வீதம் முளைகட்டிய வெந்தயத்தை தினமும் சாப்பிட்டு வரலாம்.

 

முளைகட்ட வைப்பது எப்படி?

வெந்யதத்தை முளைகட்ட வைப்பதற்கு முன் குறைந்தது 6 மணி நேரமாவது தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

அப்படி ஊறவைத்த வெந்தயத்தை எடுத்து ஒரு வெள்ளை நிறத் துணியில் கட்டி வைததுவிடுங்கள்.

காலையில் எடுத்துப் பார்த்தால் முளைகட்டியிருக்கும்.

முளைகட்டுவதற்கு குறைந்தபட்சம் எட்டு மணிநேரமாவது ஆகும். அதோடு அந்த ஊற வைத்த தண்ணீரை வீணாக்காமல் குடிக்கலாம். தலை முடியை அலசுவதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்

Related posts

முதுகு நலமாயிருக்க 10 வழிகள்”…

nathan

திருமணத்திற்கு பிறகு ஏற்படும் மன அழுத்தத்தை தவிர்க்கும் வழிகள் – தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

கொழுப்பை குறைக்கும் உணவுகள்

nathan

சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பது உடல் நலத்தை பாதிக்குமா?இத படிங்க!

nathan

தினமும் உலர்திராட்சை… நன்மைகளோ ஏராளம்!

nathan

வெறும் வயிற்றில் பச்சை முட்டை ஆரோக்கியமா?

nathan

உடல் எடையை குறைக்க அன்றாடம் இப்படி தான் தூங்க வேண்டுமாம்…!தெரிந்துகொள்வோமா?

nathan

புட்டிப்பால் குடிக்கும்பொழுது, குழந்தைகளிடம் சில விஷயங்களில் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும்.

nathan

மாதவிடாய் காலத்தில் பெண்கள் கட்டாயம் செய்யக்கூடாத விஷயங்கள்!

nathan