ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிஞ்சிக்கங்க…குளிர் காலத்தில் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்…

குளிர்காலத்தில் கோடை காலத்தை போல் அடிக்கடி தாகம் எடுக்காததால், நம்மை அறியாமலேயே நீர் பருகும் அளவு குறைந்து போய்விடும். குளிர்காலத்தில் குளிர்ச்சி நிலவுவதால் உடலுக்கு குறைந்த அளவிலேயே திரவம் தேவைப்படும் என்று அர்த்தமல்ல.

குளிர்காலத்தில் வியர்வை குறைவாக சுரக்கும். நம்மைச் சுற்றியுள்ள காற்றும் உலர்ந்து போய்விடும். அதனால் சிறுநீர் மூலம் திரவ இழப்பு அதிகரிப்பதால் உடல் அதிக ஈரப்பதத்தை இழக்கும். அதனை ஈடு செய்வதற்கு நீர்ச்சத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஆதலால் குளிர் காலத்தில் தண்ணீர் உட்கொள்வதை குறைக்காதீர்கள். வெப்பநிலை குறைவாக இருக்கும்போதும் நீரிழப்பு ஏற்படலாம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

உடலில் நீர்ச்சத்தை பேணுவதற்கு வெறுமனே தண்ணீர் மட்டும் பருகுவதும் கூடாது. உணவு பட்டியலில் பழங்களை அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம். ஆரஞ்சு, தர்பூசணி, அன்னாசி மற்றும் பீச் போன்ற திரவ சத்து நிறைந்த பழங்கள், பிரோக்கோலி போன்ற காய்கறிகளை உட்கொள்ளலாம். இது தினசரி உணவில் அதிக திரவத்தை சேர்ப்பதற்கான வழிமுறையாகும். பருவ கால காய்கறிகள் மற்றும் மூலிகைகளை கொண்டு சூப் தயாரித்து பருகலாம். வீட்டில் தயாரிக்கும் சூப்பை உட்கொள்வது நீர்ச்சத்தை மேம்படுத்த உதவும்.

குளிர் காலத்தில் மது அருந்துவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அது நீரிழப்பை ஏற்படுத்தக்கூடும். அன்றாட உடல் செயல்பாடுகளுக்கு ஏற்ப நீர் உட்கொள்ளும் அளவை தீர்மானிப்பதும் முக்கியமானது. உதாரணமாக கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்பவர்கள் மற்றவர்களை விட அதிகமாக தண்ணீர் பருக வேண்டும். உடலில் நீரிழப்பின் அளவு அதிகரிக்கும்போதுதான் தாகம் எடுக்கும். அதற்கு இடம் கொடுக்காமல் நாள் முழுவதும் சீரான இடைவெளியில் தண்ணீர் பருகிக்கொண்டே இருக்க வேண்டும்.

நம் உடலுக்கு தினமும் எவ்வளவு தண்ணீர் தேவைப்படும்:

சராசரியாக ஒரு நபர் உடலில் நீரேற்றத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு ஒவ்வொரு நாளும் 3.7 லிட்டர் அல்லது 125 அவுன்ஸ் தண்ணீர் தேவைப்படுகிறது. தண்ணீர் உட்கொள்ளும் அளவு நபருக்கு நபர் மாறுபடும். அது அவரது உடல் செயல்பாடு, வசிக்கும் சூழல் உள்ளிட்ட சில காரணிகளைப் பொறுத்தது.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

தண்ணீர் தரும் பலன்கள்

சரியான நேரத்தில் தண்ணீர் பருகுவது உடலின் செயல்திறனை அதிகரிக்க உதவும்.

காலையில் எழுந்ததும் 2 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும்.

அது உள் உறுப்புகள் சீராக செயல்படுவதற்கு உதவும்.

சாப்பிடுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு தண்ணீர் பருகலாம்.

அது செரிமானம் சுமுகமாக நடைபெற வழிவகை செய்யும்.

குளிப்பதற்கு முன்பு 1 டம்ளர் தண்ணீர் பருகுவது நல்லது.

அது ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.

தூங்க செல்வதற்கு முன்பு 1 டம்ளர் தண்ணீர் பருகலாம்.

அது பக்கவாதம் அல்லது மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button