39.1 C
Chennai
Friday, May 31, 2024
201710281133439665 1 babysleep. L styvpf
ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

குழந்தைகள் தூங்கும் போது கவனிக்க வேண்டியவற்றை நாம் அறிந்திருக்க மாட்டோம்

பிறந்த குழந்தைகள் 18 மணி நேரம் வரை தூங்கி கொண்டே இருப்பார்கள். பெரும்பாலான குழந்தைகள் இரவில் விழித்திருப்பார்கள். குழந்தைகளை தூங்க வைப்பது என்பது பெற்றோர்களுக்கு சவாலான ஒன்றாக இருக்கும். தூங்கி கொண்டிருக்கும் குழந்தை, நீங்கள் வேலைகளை முடித்து ஓய்வெடுக்கலாம் எனும் போதும் அழ துவங்கி விடுவார்கள். குழந்தைகளை தூங்க வைப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி அனைவரும் அறிந்திருப்பர். ஆனால், குழந்தைகள் தூங்கும் போது கவனிக்க வேண்டியவற்றை நாம் அறிந்திருக்க மாட்டோம். இங்கு குழந்தைகள் தூங்கும் போது கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள் பற்றி பார்க்கலாம்.201710281133439665 1 babysleep. L styvpf

1. குழந்தையை படுக்க வைக்க பயன்படுத்தப்படும் துணி, தொட்டில் அதிலிருக்கும் பொருட்களை என அனைத்தும் தூய்மையானதாக இருக்க வேண்டும். தினமும் அவற்றை துவைத்து சுத்தமாக வைக்க வேண்டும். அவ்வாறு இல்லை என்றால், குழந்தைகளுக்கு நோய் தொற்றை ஏற்படுத்தும்.

2. குழந்தைகளுக்கு தொட்டில் கட்டும் போது, கொக்கிகளை உபயோகிப்பது சிறந்தது. கொக்கிகளுக்கு பதிலாக தற்போது கடைகளில் கிடைக்கும் ஸ்ப்ரிங்களை பயன்படுத்த கூடாது. ஸ்பிரிங் பயன்படுத்தும் போது, அது குதிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவதால் குழந்தைகள் உறங்கலாம். ஆனால், அது அவர்களின் இதயத்தை பாதிக்க கூடியது. மருத்துவர்களும் ஸ்பிரிங்களை தவிர்க்க பரிந்துரைக்கிறார்கள்.

3. குழந்தைகளை படுக்க வைக்கும் தொட்டிலில் பொம்மைகளை காட்டி விடுவது பெரும்பாலானோர் செய்யும் ஒன்று. ஆனால், அதை குழந்தைக்கு மிக அருகில் காட்டினால், இரண்டு கண் விழிகளும் ஒரே இடத்தில் அதிக நேரம் இருக்கும். இது குழந்தைகளுக்கு ஓரக்கண் பாதிப்பை ஏற்படுத்தும். குறைந்தது குழந்தைகளுக்கும், பொம்மைக்கும் 2 அடி இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

4. குழந்தைகள் தூங்கும் அறை அதிக வெளிச்சம் இல்லாமல் இருக்க வேண்டும். இரவு நேரத்தில் உறங்கும் போது, நாம் பெரும்பாலும் நீல வண்ண விளக்கையே பயன்படுத்துவோம். ஆனால், குழந்தைகள் தூங்கும் அறையில் சிவப்பு வண்ண விளக்கை பயன்படுத்தினால் கருவறை போன்று உணர்வதுடன், நன்கு உறங்குவார்கள்.

5. குழந்தைகள் தூங்கும் போது அல்லது விழித்திருக்கும் போதோ அவர்கள் அருகில் போர்வை, துணி அல்லது துண்டு போன்றவற்றை வைக்க கூடாது. அவர்கள் அவற்றை தெரியாமல் முகத்தின் மீது போட்டு கொண்டால், மூச்சு திணறல் ஏற்படும். குழந்தைகளுக்கு போர்வை போர்த்தி விட்டாலும் இடுப்பு வரை மட்டும் இருப்பது சிறந்தது.

6. கொசுக்களை விரட்ட என நாம் பலவற்றை கடைகளில் வாங்கி உபயோகிறோம். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், அவை ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதற்கு பதிலாக தீர்த்து வீசி எரிய போகும் கொசு விரட்டி டப்பாக்களில் வேப்ப எண்ணெய் மற்றும் கற்பூரத்தை கலந்து பயன்படுத்தலாம். மேலும், குழந்தைகளுக்கான கொசு வலைகளையும் பயன்படுத்தலாம்.

7. இரவு நேரத்தில் குழந்தைகளை தாயுடன் உறங்க செய்வது சிறந்தது. குழந்தைகளின் இடத்தை மாற்றாமல் ஒரே இடத்தில தூங்க செய்தால், அவர்கள் தூங்க வேண்டிய இடத்தை மனத்தில் கொள்வார்கள். குழந்தைகளை தொட்டிலில் மட்டும் அல்லாமல் மடியிலும், தோலிலும் மற்றும் தட்டி கொடுத்தல் போன்றவற்றை செய்தும் தூங்க வைத்து பழக்க வேண்டும். நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது சிரமம் ஏற்படாமல் இது தவிர்க்கும்.

Related posts

ஆண்களே தெரிஞ்சிக்கங்க… முகத்தில் உள்ள கருமையைப் போக்கும் சில எளிய இயற்கை வழிகள்!

nathan

இந்த ஆறு பயிற்சியை வீட்டில் செய்வதன் மூலம் உடல் எடையை விரைவாக குறைக்க முடியும்.

nathan

இதோ உங்களுக்காக டிப்ஸ்.! குழந்தையின் உடல் பருமனை குறைக்க உதவும் எளிய வழிமுறைகள்!

nathan

அரைக்கீரைவைத்து சத்தான கொழுக்கட்டை செய்வது எப்படி?

sangika

நீங்க சிக்கன் அதிகம் சாப்பிடுவீங்களா? அப்ப கட்டாயம் படிச்சு பாருங்க.

nathan

தெரிந்துகொள்வோமா? குழந்தைகள் மனதில் உங்கள் பிம்பம் என்ன?

nathan

கொஞ்சம் குண்டா இருக்கீங்களா?ஆபத்தான நோய்கள் வர வாய்ப்பிருக்கு… ஜாக்கிரதை…!

nathan

சிகரெட்டிற்கு இணையானதாகக் கூறப்படுகிறது நாம் அதிகம் பயன்படுத்தும் இந்த பொருள்!….

sangika

துரத்தும் முதுமை… காப்போம் இளமை!

nathan