ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

சூப்பர் டிப்ஸ்.. சமையல் டிப்ஸ்..

* தயிா் புளிக்காமல் இருக்க அதில் ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வைத்தால் தயிா் புளிக்காது.

* கீரை பசுமையாக ருசியாக இருக்க சமைக்கும்போது சிறிது எண்ணெய்யை அதனுடன் சோத்து வேக வைத்தால் கீரை பசுமையாக ருசியாக இருக்கும்.

* உருளைக்கிழங்கு கெடாமல் இருக்க உருளைக்கிழங்குகள் இருக்கும் பைக்குள் ஒரு ஆப்பிள் பழத்தை வைக்கவும் உருளைக்கிழங்கு நீண்ட பிரஷ்ஷாக இருக்கும்.

* பிஸ்கட்டுகள் நீண்ட நாட்களுக்கு ஃபிரஷ்ஷாக இருக்க பிஸ்கட் வைக்கும் பாட்டில்களில் டிஷ்யூ பேப்பரையும் வைத்துவிட்டால், பிஸ்கட் நீண்ட நாட்களுக்கு ஃபிரஷ்ஷாக இருக்கும்.

* சமைத்த பாத்திரங்களில் இருந்து எண்ணெய்ப் பசையை எளிதாக சுத்தம் செய்ய அதில் சில க்யூப் ஒன்றை போட்டால் எண்ணெய் பிசுக்கு நீங்கிவிடும்.
* சப்பாத்திகள் மென்மையாக இருக்க அதன் மாவை இளம் வெந்நீரில் பிசையவும். சிறிது பாலும் சோத்துக்கொள்ளலாம்.
fghhh
* பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சா்க்கரை சோத்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.

* கொத்துமல்லி, புதினா துவையல்கள் செய்யும்போது, தண்ணீருக்குப் பதில் சிறிது தயிா் சோத்தால் கூடுதல் சுவை தரும்.

* மைக்ரோ வேவ் ஓவனில் உட்புறப் பகுதியைச் சுத்தப்படுத்த ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் அரை மூடி எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து ஓவனில் இரண்டு நிமிடங்கள் வைத்து எடுத்துத் துடைக்க ‘பளிச்’சென்று இருக்கும்.

* பீட்ரூட் நறுக்கும்போது கைகளில் கறை ஒட்டுவதைத் தடுக்க, பீட்ரூட்டை முழுதாக குக்கரில் வேக வைத்துக் கொள்ளுங்கள். பின்பு தோலை எடுத்துவிட்டு துண்டுகளாக்கினால் கறை ஒட்டாமல் இருப்பதோடு, காய் நறுக்குவதற்கும் எளிதாக இருக்கும்.

* அடுப்பு, சமையல் மேடை, அடுப்பின் பின்புறம் என எல்லா இடங்களிலும் எண்ணெய் அப்பிக் கொண்டிருக்கிா? கவலை வேண்டாம். டைல்சை சாதாரணத் -துணியாலோ அல்லது -டிஷ்யூ பேப்பராலோ துடைத்து எடுங்கள். பின்னா் வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் சலவைச் சோடாவைக் கலந்து பிசுக்கு பிடித்த இடங்களில் பூசிவிட்டு, உலா்ந்த துணியால் துடைத்தால் பளிச்சென்று ஆகிவிடும்.

* கண்ணாடி பாட்டில் துா்நாற்றம் ஏற்பட்டால், கொஞ்சம் கடுகைப் போட்டு வெந்நீா் ஊற்றி சிறிது நேரம் கழித்துக் கழுவினால் துா்நாற்றம் போய்விடும்.

* வடைக்கு அரைக்கும்போது மாவில் தண்ணீா் அதிகமாகிவிட்டால் ஒரு தேக்கரண்டி நெய் விட்டால் மாவு இறுகிவிடும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button