முடி உதிர்தல் என்பது பெரும்பாலான மக்களின் முக்கிய பிரச்சனையாக உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் முடி உதிர்தல் பிரச்சனை உள்ளது. மிக குறைந்த வயதிலே வழுக்கை ஏற்படுவது, அனைத்து முடிகளும் உதிர்ந்துவிடுவது பெரும் மன கஷ்டத்தை உங்களுக்கு ஏற்படுத்தலாம். நீங்கள் கெமிக்கல் மற்றும் இரசாயன தயாரிப்புகளை பயன்படுத்தும்போது, அது உங்கள் முடிக்கு மேலும் பிரச்சனையை ஏற்படுத்தலாம். முடி உதிர்தல், வலுவிழந்த முடி, நரை முடி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
ஊட்டமளிக்கும் கூந்தலுக்கு, ஷாம்பு மற்றும் கண்டிஷனரை விட நல்ல இயற்கையான பொருட்கள் தேவை. இயற்கையயான பொருளினால் செய்யப்பட்ட ஹேர் மாஸ்க்குகள்தான் உங்கள் முடிக்கு தேவை. இருப்பினும், உங்கள் ஹேர் மாஸ்க்கில் எந்தப் பொருளையும் பயன்படுத்த முடியாது. நீங்கள் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் குறித்து கவனமாக இருக்க வேண்டும். பயனுள்ள முடிவுகளை வழங்கும் அற்புதமான ஹேர் மாஸ்க்குகளுக்கான இரண்டு சிறப்பு பொருட்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
முட்டையின் மஞ்சள் கரு ஹேர் மாஸ்க்
முட்டையின் மஞ்சள் கரு மிகவும் பொதுவானது மற்றும் எளிதில் பயன்படுத்தக்கூடிய ஹேர் மாஸ்க் ஆகும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்கள் உலர்ந்த கூந்தலில், குறிப்பாக உச்சந்தலையில் மற்றும் முடியின் முடிவில் விரல்களைப் பயன்படுத்தி முட்டையின் மஞ்சள் கருவை தடவுங்கள். பின்னர் குறைந்தது 30-40 நிமிடங்கள் விட்டுவிட்டு, அடுத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
மஞ்சள் கரு தலைமுடிக்கு அளிக்கும் நன்மைகள்
முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின்கள் நிறைந்துள்ளதால், இது உங்கள் தலைமுடிக்கு சேதம் விளைவிப்பதைத் தடுத்து, உங்கள் தலைமுடியை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றுகிறது. உங்கள் முட்டையின் மஞ்சள் கருவில் எலுமிச்சை சாறையும் சேர்க்கலாம். நீங்கள் முட்டையின் மஞ்சள் கருவின் வாசனையைக் குறைக்க விரும்பினால், மேலும், எலுமிச்சையை சேர்த்துக்கொள்ளலாம். இது முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும், முட்டையின் மஞ்சள் கருவில் தேன் மற்றும் ஆப்பிள்-சைடர் வினிகரை கலந்து செய்தால், அது உலர்ந்த கூந்தலுக்கு சிகிச்சையளிக்க உதவும்.
தேங்காய் எண்ணெய் ஹேர் மாஸ்க்
முடி உதிர்வை எதிர்த்துப் போராடவும் முடி வலுவாகவும் வழவழப்பாகவும் இருக்க நாம் அனைவரும் தேங்காய் எண்ணெயைத் தலைமுடிக்குப் பயன்படுத்துகிறோம். ஆனால் உங்கள் தலைமுடி பளபளப்பாகவும் உலர்ந்த முனைகளைக் குறைக்கவும் நீங்கள் விரும்பினால், சூடான தேங்காய் எண்ணெயுடன் ஒரு கப் ஆலிவ் எண்ணெயைச் சேர்க்கலாம். இந்த ஹேர் மாஸ்கை உலர்ந்த கூந்தலில் 30 நிமிடங்கள் தடவி, பின்னர் தண்ணீரில் கழுவ வேண்டும்.
எப்படி பயன்படுத்தலாம்?
பொடுகு, பேன் மற்றும் உச்சந்தலையில் அரிப்பு இருந்தால், நீங்கள் தேங்காய் எண்ணெய் மற்றும் பழுப்பு சர்க்கரையை கலந்து, ஷாம்பு செய்த பின் ஈரமான கூந்தலில் தடவலாம். இந்த மாஸ்க்கை 5-10 நிமிடங்கள் விட்டுவிட்டு, குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரில் தலைமுடியை கழுவலாம். சிறந்த இரத்த ஓட்டம் மற்றும் முடி வளர்ச்சிக்கு, நீங்கள் தேங்காய் எண்ணெய் மற்றும் இலவங்கப்பட்டையை பேஸ்ட் செய்து, உலர்ந்த கூந்தலில் பயன்படுத்தலாம். இந்த பேஸ்டை 40 நிமிடங்கள் விட்டு, பின்னர், தலைமுடியை கழுவ வேண்டும்.
இறுதி குறிப்பு
மேலே கொடுக்கப்பட்டுள்ள இந்த இரண்டு ஹேர் மாஸ்க்குகளை பயன்படுத்தி உங்கள் முடி உதிர்வை குறைக்கலாம். மேலும் உங்கள் முடி வலுவாகவும் விரைவில் வளரவும் கூடும். ஆரோக்கியமான முடி பராமரிப்பிற்கு இந்த ஹேர் மாஸ்க்குகளை பயன்படுத்துங்கள்.