மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க… வாய் துர்நாற்றம், சொத்தைப் பல் பிரச்சனை போகணுமா? அப்ப தினமும் செய்யுங்க…

ஒருவருக்கு வாய் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். வாய் ஆரோக்கியமாக இருந்தால் தான், உடல் ஆரோக்கியமாக இருக்கும். தினமும் இரண்டு முறை பற்களைத் துலக்கினால் வாய் சுத்தமாக இருப்பதோடு, ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக இருக்கும். அமெரிக்க பல் சங்கம் ஒரு நாளைக்கு இரண்டு முறை, அதுவும் ஒவ்வொரு முறையும் 2 நிமிடங்கள் பற்களைத் துலக்க பரிந்துரைக்கிறது.

 

நீங்கள் சரியான முறையில் பற்களைத் துலக்கும் போது, பற்களுக்கு இடையில் மற்றும் நாக்கில் சேகரிக்கக்கூடிய பிளேக் மற்றும் பாக்டீரியா நீக்கப்படுகிறது. அத்துடன் ஈறு நோய்கள் மற்றும் சொத்தை பற்களைத் தடுப்பதோடு, வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்தையும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் மேம்படுத்துகிறது.

நம்மில் பலருக்கும் பற்களை சரியான முறையில் துலக்குவது எப்படி என்று தெரிவத்தில்லை. ஆகவே இப்போது பற்களை சரியாக துலக்குவது எப்படி என்று காண்போம். அதைப் படித்து தெரிந்து இனிமேல் அவ்வாறு பற்களைத் துலக்கி, பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.

படி #1

7 toothbrush 1589
முதலில் டூத் பிரஷை நீரில் நனைத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் சிறிது டூத் பேஸ்ட்டை வைக்க வேண்டும். கடைகளில் ஏராளமான டூத் பேஸ்ட்டுகள் விற்கப்படுகின்றன. அதில் ப்ளூரைடு உள்ள உங்களுக்கு விருப்பமான பேஸ்ட்டை வாங்கிப் பயன்படுத்துங்கள். ஏனெனில் ப்ளூரைடு பேஸ்ட் தான் பற்கள் சொத்தை அடைவதைத் தடுத்து பாதுகாக்கும்.

படி #2

பற்களைத் துலக்க ஆரம்பிக்கும் போது, வாயின் முன் பகுதியில் உள்ள பற்களில் பிரஷை வைத்து, மேலும் கீழுமாக தேய்க்க வேண்டும். பின் வட்ட சுழற்சியில் மென்மையாக பற்களை தேய்க்க வேண்டும். இப்படி ஒரு 15 நொடிகள் பற்களைத் தேய்க்க வேண்டும்.

படி #3

 

பின் வாயைத் திறந்து இரு புறத்திலும் உள்ள கீழ் பற்களை 15 நொடிகள் தேய்க்க வேண்டும். பிறகு 15 நொடிகள் மேல் பகுதியில் உள்ள பற்களைத் தேய்க்க வேண்டும். அதன் பின் பற்களின் பக்கவாட்டுப் பகுதியை 15 நொடிகள் தேய்க்க வேண்டும். இப்படி தேய்க்கும் போது மிகவும் அழுத்தி தேய்க்காமல், மென்மையாக லேசான வட்ட சுழற்சியுடனேயே பற்களைத் தேய்க்க வேண்டும். இதனால் அழுக்குகள் வெளியேற்றப்படும்.

படி #4

அடுத்ததாக பற்களின் பின் பகுதியை 30 நொடிகள் தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும். இப்படி பற்களின் பின்பகுதியை சுத்தம் செய்யும் போது, இடுக்குகளில் உள்ள அழுக்குகள் வெளியேறும் வகையிலும், ஈறுகள் பாதிப்படையாதவாறும் மென்மையாக தேய்க்க வேண்டும்.

படி #5

பிறகு நாக்கை சுத்தம் செய்ய வேண்டும். வாய் சுத்தம் என்று வரும் போது, அதில் நாக்கும் சுத்தமும் அடங்கும். நாக்கிலும் பாக்டீரியாக்கள் அல்லது ப்ளேக்குகளின் பெருக்கமும் இருக்கும். ஆகவே எப்போது பற்களைத் துலக்கினாலும், நாக்கையும் சுத்தம் செய்ய வேண்டும்.

படி #6

இறுதியில் வாயில் உள்ள டூத் பேஸ்ட், எச்சில் மற்றும் நீர் எச்சங்களை வெளியே துப்பி விட வேண்டும். அதன் பின் குளிர்ந்த நீரால் வாயை நன்கு கழுவ வேண்டும்.

குறிப்பு

* முக்கியமாக எப்போதும் பற்களைத் துலக்குவதற்கு மென்மையான பற்களைக் கொண்ட பிரஷ்களைத் தான் பயன்படுத்த வேண்டும்.

* ப்ளூரைடு உள்ள டூத் பேஸ்ட்டைத் தான் பயன்படுத்த வேண்டும்.

* மேலும் 3-4 மாதத்திற்கு ஒருமுறை டூத் பிரஷை தவறாமல் மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் ஈறு நோய்கள் வரக்கூடும்.

* ஒரு நாளைக்கு இரண்டு வேளை பற்களைத் துலக்க வேண்டும். காலை எழுந்ததும் மற்றும் இரவு உணவிற்கு பின் உறங்க செல்வதற்கு முன்பும் பற்களைத் துலக்குவது அவசியம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button