26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
243781b26a1e4697932959f565f23983
ஆரோக்கிய உணவு

வேர்க்கடலை சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும்

வேர்க்கடலையை வேக வைத்தாகிலும் வாணலியில் இட்டு வறுத்தாகிலும் வெல்லம் சேர்த்து சாப்பிடுவதால் உடலை வளர்க்கும் உரமாக விளங்கும். ஆண்மையை அதிகரிக்கச் செய்யும். வேர்க்கடலையைத் தோல் நீக்கி இடித்து மாவாக்கிப் பாலில் வேகவைத்துச் சாப்பிட்டு வருவதால் ஆண்மை அதிகரிக்கும்.

வேர்க்கடலை எண்ணை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பாலில் கரைத்து அன்றாடம் அருந்திவர சிறுநீர்ப்பை அழலையை போக்கி சிறுநீரை சிரமமின்றி கழிக்க உதவுவதோடு சிறு நீர்த்தாரை எரிச்சலையும் போக்குவதாக அமையும். மேலும் மலச்சிக்கலை உடைத்து மிகத் தாராளமாக மலத்தை சுத்திகரிக்கச் செய்யும். ஒரு தேக்கரண்டி வேர்க்கடலை எண்ணெய் பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வருவதால் பால்வினை நோயான கொனேரியா என்னும் ஒழுக்கு நோய் குணமாகும்.

சீனமக்கள் கடலை எண்ணெயை கொனேரியா நோய்க்கும், மூட்டுத் தேய்மானம், மூட்டுவலி ஆகியனவற்றுக்கும் தூக்கமின்மைக்கும் பயன் படுத்துகின்றனர். வேர்க்கடலையை வறுத்தோ, வேக வைத்தோ சாப்பிடுவதால் அதன் சத்துவம் அதிகமாக வதாக ஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன. இதனால் இரண்டு முதல் நான்கு பங்கு உயிர்ச்சத்து அதிகமாகக் கிடைப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வேர்க்கடலையில் பி.காம்ப்ளக்ஸ் விட்ட மின்கள் எனப்படும் ரிபோப்ஃபிளேவின், நியாசின், தயாமின், பேண்டோதெனிக் ஆசிட், விட்டமின் பி6 மற்றும் போலேட் ஆகியன அடங்கியுள்ளன. இவை மூளையின் ஆரோக்கியத்துக்கும் மூளைக்கு ரத்த ஓட்டம் சீராகச் செல்லவும் உதவுகின்றன. ஒரு நாளைக்கு ஒரு பிடி வேர்க்கடலை எடுத்துக் கொள்வதால் உடலுக்கு போதிய சத்துவங்கள் கிடைக்கிறது என்பதால் வேர்க்கடலை உண்ணும் பழக்கத்தை நாம் வளர்த்துக் கொள்வது நமக்கு ஆரோக்கியம் தரும்.243781b26a1e4697932959f565f23983

Related posts

தெரிஞ்சிக்கங்க…வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

கெட்ட கொழுப்பை நீக்கும் பிஞ்சு பாகற்காய் சூப்

nathan

சுண்டைக்காய் பத்திய சாப்பாடு கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அப்ப இத படிங்க!

nathan

கிராமத்து நெத்திலி கருவாட்டு குழம்பு

nathan

டார்க் சாக்லேட் சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா..?

nathan

கீரையில் உள்ள எண்ணற்ற சத்துக்கள்

nathan

சிறுநீரில் கற்கள் உருவாகாமல் இருக்க செலரி தண்டு

nathan

சூப்பர் டிப்ஸ்! ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் வெண்டைக்காய்!!

nathan

சூப்பர் டிப்ஸ் கொண்டைக்கடலை புளிக்குழம்பு

nathan