உணவில் சோம்பு இடம்பெறுவதால் என்ன பலன் ? எதற்காக சிலர் உணவு சாப்பிட்ட உடன் சோம்பு சாப்பிடுகிறார்கள் என்பதை பார்ப்போம் .
சோம்பு உணவின் சுவையைக் கூட்டுவதோடு, நல்ல மணத்தையும் கொடுக்கிறது . இதில் பல்வேறு ஊட்டச்சத்துக்களும் அடங்கியிருப்பதாக மருத்துவம் தெரிவிக்கிறது .
பொதுவாக உணவு உண்டபின் சோம்பு சாப்பிடுவது வாய் புத்துணர்ச்சிக்காக என பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர் . ஆனால் சோம்பு உணவு உண்ட பின் வாயில் இருந்து வெளிவரும் துர்நாற்றத்தைப் போக்குவதோடு , உணவுக்கு பின் உடலில் நடைபெறும் சில செயல்பாடுகளுக்கும் உதவி புரிகிறது .
உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் திறனைக் கொண்ட சோம்புவால் அஜீரண கோளாறுகள் தடுக்கப்பட்டு , கொழுப்புக்களையும் , எடையையும் கரைக்க உதவும் . சோம்பு இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துவதோடு , இன்சுலின் உணர்திறனையும் அதிகரிக்கும் . சோம்பு விதைகள் டைப் -2 சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது
மேலும் இது வாயில் இருக்கும் எச்சில் சுரப்பியைத் தூண்டி , அதிகளவு எச்சிலை சுரக்க உதவும் . சோம்பு இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கும் . உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் . சோம்பில் உள்ள பொட்டாசியம் சத்து இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி , இதயத்திற்கு நன்மையளிக்கும் .
மேலும், உணவுகளை எளிதில் செரிமானம் செய்ய உதவுவதோடு மலச்சிக்கலை தடுத்து கழிவுகளை ஒன்று சேர்த்து வெளியேற்றும் . இருப்பினும் சோம்பை அதிகமாக சாப்பிடக்கூடாது . சோம்பு உடலில் நீர்த்தேக்க பிரச்சனையை சரிசெய்ய உதவும் . அதாவது சிறுநீர்ப்பெருக்கும் பண்புகள் உள்ளது . வாய்வுத் தொல்லை மற்றும் வயிற்று உப்புச பிரச்சனையில் இருந்தும் விடுவிக்கும் . மதிய உணவிற்கு பின் சோம்பை சாப்பிடுவதால் , வயிற்று அசௌகரியத்தால் ஏற்படும் குமட்டல் பிரச்சனையில் இருந்தும் விடுபடலாம் .