31.1 C
Chennai
Monday, May 20, 2024
ஆரோக்கிய உணவு

கொழுப்பை குறைக்கும் வெங்காயத்தாளின் மேலும் பல பயன்கள்

[ad_1]

 வெங்காயத்தாள் மிகவும் பிரபலமான காய்கறிகளில் ஒன்றாகும். மேலும், அவைகள் வெள்ளை, மஞ்சள் மற்றும் சிவப்பு உட்பட பல்வேறு வகைகளில் கிடைக்கிறது.

இந்த இளந்தளிர் வெங்காயத்தாளில் மிகுந்த சுவை மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. நீண்ட காலமாக வெங்காயத்தாள் சீன பாரம்பரிய மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன.

வெங்காயம் போலவே வெங்காயத்தாளிலும் கூட கந்தகச்சத்து அதிகமாக உள்ளது. அதிக அளவிலான கந்தகச்சத்து பல சுகாதார நன்மைகளை வழங்குகிறது.

இந்த இளந்தளிர் வெங்காயத்தாளில் குறைந்த கலோரி இருக்கின்றன. மேலும் வெங்காயத்தாளில் வைட்டமின் சி, வைட்டமின் பி2 மற்றும் தயமின் உட்பட பல வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன.

வெங்காயத்தாள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி, புற்றுநோயை குணப்படுத்தும்.வெங்காயத்தாளின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளினால், செரிமான உபாதைகளுக்கு நிவாரணம் கூட வழங்குகிறது.

இந்த காய்கறிகளிலுள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து,உடலை நோயிலிருந்து பாதுகாக்கிறது. வெங்காயத்தாளில் உள்ள பெக்டின் என்னும் நீரில் கரையக்கூடிய கூழ்ம நிலை கார்போஹைட்ரேட், குறிப்பாக பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

வெங்காயத்தாள் கண் நோய் மற்றும் கண் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை வழங்குகிறது. வெங்காயத்தாள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. அவைகள் உடலில் உள்ள கொழுப்புக்களை குறைக்கவும் மற்றும் அதனால் உண்டாகும் இதய நோய் அபாயத்தையும் குறைக்கின்றது.

மேலும், வெங்காயத்தாள் இரத்த அழுத்த அளவுகளை குறைக்கவும் மற்றும் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. வெங்காயத்தாள் இரத்தத்தில் உள்ள கொழுப்பு அளவுகளை குறைக்க உதவுகிறது.

வெங்காயத்தாளில் உள்ள குரோமியம் சத்து நீரிழிவு நோய்க்கான சுகாதார நலன்களை வழங்குகிறது. இது இரத்தத்தில் காணப்படும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது மற்றும் ஊட்டச்சத்து தன்மையை அதிகரிக்கிறது.

மேலும் இதில் உள்ள அமிலமானது, இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக உள்ளது. வெங்காயத்தாளில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளினால், ஜலதோஷம் மற்றும் காய்ச்சலை எதிர்த்து போராட உதவுகிறது.

 

Related posts

அதிக நட்ஸ் சாப்பிட்டால் ஆபத்தா?

nathan

பாதாம் பால் யாரெல்லாம் குடிக்கக்கூடாது?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

சமையல் மட்டும் முக்கியம் இல்லை இவற்றையும் கருத்தில் எடுங்கள்!

sangika

ஆண்களின் உடல் சக்தியை அதிகரிக்க உதவும் ஆறு வகையான தேநீர்!!!

nathan

சிகப்பு நிற பழங்களை ஏன் சாப்பிட வேண்டும்?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

உங்களுக்கு தெரியுமா மலை நெல்லிக்காய் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

கீரை…. சாப்பிடப்போறீங்களா?

nathan

விற்றமின் A

nathan

தெரிஞ்சிக்கங்க…மூல நோய் முதல் நீரிழிவு நோய் வரை தலை தெறிக்க ஓட விடும் குட்டி குட்டி விதைகள்!!!

nathan