இரவு நேரத்தில் குறிப்பிட்ட உணவு மட்டுமே சாப்பிட வேண்டும் என்று கூறுவார்கள். அதிகமாக சாப்பிட்டால் செரிமான பிரச்னை ஏற்படும். கீரையில் பல மடங்கு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.
இதனை எடுத்து கொள்வதால் உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கின்றது. ஆனால் உடலுக்கு நல்லது கொடுத்தாலும் இரவு வேளையில் இதை அறவே தவிர்த்து கொள்ள வேண்டும். ஏன் கீரையை இரவு நேரங்களில் சாப்பிட கூடாது என்பதை குறித்து பார்க்கலாம்..
- கீரை எளிதில் ஜீரணமாகாது. அதிலும் இரவில் சாப்பிட்டுப் உடனே உறங்குவதால் தேவையற்ற உடல் தொந்தரவுக்கு வழி வகுத்துவிடும். எனவே பகல் வேளைகளில் மட்டுமே அதைச் சாப்பிட வேண்டும்.
- கீரையில் உள்ள பச்சையம் மற்றும் அதில் உள்ள நார் சத்துக்களை ஜீரணிக்கக்கூடிய தன்மைகள் இரவில் குறைவாகவே சுரக்கும். அதனால் கீரை ஒருவித மந்தநிலையை உருவாக்க அதிக வாய்ப்புள்ளது.
- இரவில் கீரையை எடுத்துக்கொள்வதால் உடலுக்கு, தேவைக்கும் அதிகமான கலோரி கிடைக்கிறது. அதிக கலோரி வயிற்றை அசெளகர்யம் அடையச்செய்கிறது. இதனால் செரிமானக் கோளாறு ஏற்படும்.
- முக்கியமாக, 40 வயதை தாண்டும் பெண்கள், ஹீமோகுளோபின் பிரச்னை, கால்சியம் குறைபாடு, மூட்டுவலி போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த உணவை தொட்டு கூட பார்க்கக்கூடாது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.