உணவு சாப்பிட்ட பின்பு அல்லது முன்பு சில விஷயங்களை உடனே செய்வதால் பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவதுடன் உடலின் ஆரேக்கியமும் குறைந்துவிடும்.
சாப்பிட்ட பின் செய்யக் கூடாத விஷயங்கள்
பழங்களை சாப்பிடகூடாது
உணவு சாப்பிட்டவுடனே பழங்களையும் சாப்பிடக் கூடாது, ஏனெனில் அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்தை ஏற்படுத்தும்.
எனவே சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு பழம் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
தூங்கக் கூடாது
சாப்பிட்ட உடனேயே உறங்குவது, ஓடுவது, வேகமாக நடப்பது, ஓய்வு எடுப்பது ஆகியவை கூடாது. பகல் உணவு சாப்பிட்டதும் அரை மணி நேரம் சாய்வாக உட்கார்ந்து ஓய்வு எடுத்த பின் வழக்கமான வேலைகளை செய்யலாம்.
டீ, காப்பி குடிக்க கூடாது.
உணவு சாப்பிட்டவுடன் டீ குடிக்கவும் கூடாது. ஏனெனில் தேநீர் இழையில் ஆசிட் உள்ளது. உணவில் உள்ள புரதச் சத்தினை கடினமாக்கி செரிமானக் கோளாறை உண்டாக்கிவிடும்.
குளிக்க கூடாது
உணவு சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கம் கூடாது, ஏனெனில் வயிற்றுக்கு செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும், செரிமான உறுப்புகள் பாதிப்படையலாம்.
உடற்பயிற்சி கூடாது
சிலர் காலை உணவுக்குப் பின்னரும், மதிய வேளைகளிலும் உடற்பயிற்சி செய்தால் வயிற்றுப் பிடிப்பு அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் உடற்பயிற்சி செய்வதற்கு தகுந்த நேரம் அதிகாலை அல்லது மாலை வேளைகளில் வெறும் வயிற்றில் செய்ய வேண்டும்.
நடக்கக் கூடாது
சாப்பிட்ட பின்பு நடந்தால் உணவு செரிமான உறுப்புகளுக்குப் போய்ச் சேர்ந்து உணவை நன்கு செரிக்கச் செய்வதைத் தடுக்கிறது. எனவெ நடைபயிற்சியை சாப்பிட்ட பின்பு செய்வதை தவிர்த்து விடுங்கள்.