25.3 C
Chennai
Thursday, Jan 29, 2026
23047241460dcbcc8d8e6561950d199338e95cf66100083361599009503
ஆரோக்கியம் குறிப்புகள்

சூப்பர் டிப்ஸ்!நோய்களை அண்டவிடாமல் துரத்தியடிக்கும் கஸ்தூரி மஞ்சள்!! பயங்கரமானது பவர்ஃ புல்லானது.

கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது.

அடிபட்ட வலிகளுக்கும், மூக்கில் வரும் நோய்களுக்கும், குன்ம வயிற்று வலிக்கும், கட்டிகள் உடையவும், தேமலைப் போக்கவும் கஸ்தூரி மஞ்சள் பயன்படுகிறது.

மேலும், இது மணம் தரும் வாசனைப் பொடிகள் தயாரிக்கவும், குளிக்க உதவும் தைலங்களில் சேர்க்கவும் பயன்படுகிறது.இளம் பெண்களில் சிலருக்கு முகத்தில் ஆண்களைப் போல மேலுதட்டின் மீது முடி வளர்வதுண்டு.

23047241460dcbcc8d8e6561950d199338e95cf66100083361599009503

இதைப் போக்க கஸ்தூரி மஞ்சளைப் பொடித்து அல்லது குழைத்து முகத்தில் பூசிக் கழுவி வந்தால் முடி வளர்வது தடைப்படும். முகத்தில் பொலிவு ஏற்படும்.

கஸ்தூரி மஞ்சளை வெங்காயச் சாற்றில் குழைத்துக் கட்டிகள் மீது பூசினால் கட்டிகள் உடையும்.கஸ்தூரி மஞ்சளை அரைத்துச் சூடு படுத்தி அடிபட்ட இடத்தில் தடவினாலும், கட்டினாலும் வீக்கமும் வலியும் குறையும்.

கஸ்தூரி மஞ்சள் தூளைத் தேங்காய் எண்ணெயில் கலந்து அடிபட்ட புண் அல்லது சிரங்குகளுக்கு மேல் பூசினால் விரைவில் குணமாகும்.

சாதாரண மஞ்சளுக்குப் பதிலாக, பெண்கள் கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூளாக்கியோ கல்லில் அரைத்தோ முகத்திற்குப் பூசி வந்தால், முகத்தில் பொலிவு ஏற்படும். முகப் பருக்கள், தேமல்கள் ஆகியவை வராது.

Related posts

இத பற்றி அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள் செயற்கை கருவூட்டல் சிகிச்சையில் இந்தியா எதிர்கொள்ளும் சவால்!

nathan

கருப்பை வாய் திறப்பின் அறிகுறிகள் (Cervix Dilation Symptoms)

nathan

மலச்சிக்கலை தீர்க்கும் அற்புத இயற்கை குறிப்புகள்

nathan

உங்களுக்கு தெரியுமா பேசியே மயக்குவது என்பது இந்த 5 ராசிகளுக்கும் கைவந்த கலையாகும்!

nathan

மார்பகக் கட்டியைப் பரிசோதிக்க எளிய வழிகள்

nathan

உங்க காதலரிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் மோசமான ஒருவரை காதலிக்கிறீங்கனு அர்த்தமாம்!

nathan

மாதுளை சாப்பிட்டால் சளி பிடிக்குமா?

nathan

பூசணி விதை தீமைகள்

nathan

பயன்தரும் சில எளிய குறிப்புகள்

nathan