32.6 C
Chennai
Sunday, Jul 12, 2026
ஆரோக்கியம் குறிப்புகள்

சூப்பர் டிப்ஸ்!நோய்களை அண்டவிடாமல் துரத்தியடிக்கும் கஸ்தூரி மஞ்சள்!! பயங்கரமானது பவர்ஃ புல்லானது.

கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது.

அடிபட்ட வலிகளுக்கும், மூக்கில் வரும் நோய்களுக்கும், குன்ம வயிற்று வலிக்கும், கட்டிகள் உடையவும், தேமலைப் போக்கவும் கஸ்தூரி மஞ்சள் பயன்படுகிறது.

மேலும், இது மணம் தரும் வாசனைப் பொடிகள் தயாரிக்கவும், குளிக்க உதவும் தைலங்களில் சேர்க்கவும் பயன்படுகிறது.இளம் பெண்களில் சிலருக்கு முகத்தில் ஆண்களைப் போல மேலுதட்டின் மீது முடி வளர்வதுண்டு.

இதைப் போக்க கஸ்தூரி மஞ்சளைப் பொடித்து அல்லது குழைத்து முகத்தில் பூசிக் கழுவி வந்தால் முடி வளர்வது தடைப்படும். முகத்தில் பொலிவு ஏற்படும்.

கஸ்தூரி மஞ்சளை வெங்காயச் சாற்றில் குழைத்துக் கட்டிகள் மீது பூசினால் கட்டிகள் உடையும்.கஸ்தூரி மஞ்சளை அரைத்துச் சூடு படுத்தி அடிபட்ட இடத்தில் தடவினாலும், கட்டினாலும் வீக்கமும் வலியும் குறையும்.

கஸ்தூரி மஞ்சள் தூளைத் தேங்காய் எண்ணெயில் கலந்து அடிபட்ட புண் அல்லது சிரங்குகளுக்கு மேல் பூசினால் விரைவில் குணமாகும்.

சாதாரண மஞ்சளுக்குப் பதிலாக, பெண்கள் கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூளாக்கியோ கல்லில் அரைத்தோ முகத்திற்குப் பூசி வந்தால், முகத்தில் பொலிவு ஏற்படும். முகப் பருக்கள், தேமல்கள் ஆகியவை வராது.

Related posts

தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க! தூங்கச் செல்வதற்கு முன்பு இந்த செயல்களை தவறியும் செய்யாதீங்க!

nathan

25 நாளில் கர்ப்பம் தெரியுமா ?

nathan

நினைவாற்றலை மேம்படுத்த வேண்டும் என்றால்!….

sangika

காலையில் கண் விழித்தது வெறும் வயிற்றில் இதையெல்லாம் சாப்பிட்டுவிடாதீர்கள்

nathan

உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள்

nathan

கொழுப்பு அளவு… ஆண்களும் பெண்களும்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இறுக்கமான உள்ளாடைகள் தரும் இன்னல்கள்

nathan

நாம் நல்ல பழக்கம் என்று கடைப்பிடிக்கும் சிலவன உண்மையில் தீய பலனை தான் அளிக்கின்றன!!!

nathan

பொலிவான சருமத்தையும் பளபளக்கும் கூந்தலையும் பெற நீங்க இத செஞ்சா போதுமாம்!

nathan