பெரும்பாலான மருந்துகள் தேனில் கலந்து சாப்பிடவே அறிவுறுத்தப்படுகிறது. அத்தகைய தேனை சில பழங்களின் சாறுகளுடன் கலந்து குடித்தால் நம் உடலில் உள்ள பல்வேறு பிரச்னைகள் தீரும். அவை என்னவென்று இங்கே பார்க்கலாம்.
பால் தேனை பாலில் கலந்து இரவில் தூங்குவதற்குப் படுக்கைக்குச் செல்லும் முன்பாக ஒரு டம்ளர் அளவுக்குக் குடித்து வந்தால், இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியும். இதயமும் பலம் பெறும்.
ஜூஸ் ஏதாவது பழச்சாறுடன் சர்க்கரையைக் கலந்து குடித்து, அந்த பழச்சாறில் வழியாக நமக்குக் கிடைக்கிற முழுமையான ஊட்டச்சத்துக்களையும் நாம் வீணடித்து விடுகிறோம். அதற்குப் பதிலாக, பழச்சாறுடன் தேன் கலந்து குடிக்கலாம். இதனால் பழம் மற்றும் தேன் ஆகிய இரண்டின் குணங்களும் உங்களுக்கு முழுமையாகக் கிடைக்கும். உடலுக்கு நல்ல சக்தியையும் கொடுக்கும்.
மாதுளை மாதுளைப் பழம் உடலில் ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் என்பது நம் எல்லோருக்குமே தெரிந்தது தான். ஆனால் மாதுளையை அப்படியே பழமாகச் சாப்பிடும்பொழுதோ அல்லது மாதுளைச் சாறுடனோ தேனைக் கலந்து சாப்பிடலாம். அது உடலில் ரத்த உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். ரத்த சோகையை உடனடியாகப் போக்கும். உடலுக்கு ஆற்றலைக் கொடுக்கும்.
எலுமிச்சை பொதுவாக எலுமுிச்சை பழச்சாறுடன் சர்க்கரை சேர்த்து தான் அருந்துவோம். சர்க்கரை கூடாது என்று நினைப்பவர்கள் உப்பு சேர்த்துக் குடிப்பார்கள். ஆனால் அதில் தேனும் கூட சேர்த்துக் குடிக்கலாம். தேனுக்கும் எலுமிச்சைக்கும் தனித்தனியே சில மருத்துவ குணங்கள் உண்டு. இரண்டையும் சேர்த்துக் குடிக்கும் பொழுது, நாள்பட்ட இருமலும் கூட சரியாகும்.
ஆரஞ்சு பழம் சில ஆரஞ்சுப் பழங்கள் லேசான புளிப்புச் சுவையோடு சில பழங்கள் நல்ல இனிப்பாகவும் இருக்கும். ஆனால் பெரும்பாலும் நிறைய பேர் ஆரஞ்சு ஜூஸில் சர்க்கரை சேர்த்துக் கொள்வதில்லை. ஆனால் தாராளமாக தேன் சேர்த்துக் கொள்ளலாம். ஏன் வெறுமனே அப்படியே ஆரஞ்சுப் பழத்தைச் சாப்பிடுகிறவர்கள், ஆரஞ்சு சுளைகளைத் தேனில் தொட்டும் சாப்பிடலாம். இதுவும் பாலைப் போன்று இரவில் நல்ல தூக்கத்தை உண்டாக்கும்.
நெல்லிக்காய் சாறு நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. ரத்தத்தை சுத்தப்படுத்தும். சளியைப் போக்கும். உடல் எடையைக் குறைக்க உதவும் என்பது நமக்குத் தெரிந்தது தான். ஆனால் அதில் இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்கிறது. என்னவென்றால், நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், இன்சுலின் சுரப்பு சீராக இருக்கும். சர்க்கரை நோய் பயமே தேவை இருக்காது.
ரோஜா குல்கந்து பன்னீர் ரோஜாவில் செய்யப்படுகிற ரோஜா குல்கந்து, உடலுக்குப் புத்துணர்ச்சியையும் வலிமையையும் கொடுக்கும் என்பது நமக்குத் தெரியும். நிறைய பேர் பிரட்டிலேயே ஜாமுக்குப் பதிலாக, ரோஜா குல்கந்தைத் தடவிச் சாப்பிடுகிறார்கள். உடலுக்கு வலிமையைக் கொடுக்கும். ஆனால் ரோஜா குல்கந்துடன் சிறிதளவு தேனைக் கலந்து சாப்பிட்டால், உடல் சூடு தணியும். உடல் குளிர்ச்சியடையும்.
தேங்காய்ப்பால் தேங்காய்ப் பாலுடன் சிறிதளவு தேனைக் கலந்து தினமும் ஒரு டம்ளர் அளவுக்குக் குடித்து வந்தால், அஜீரணக் கோளாறுகள் நீங்கும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீரும். குறிப்பாக, குடலில் உண்டாகின்ற புண்கள் மற்றும் வாய்ப்புண்ணை ஆற்றும் திறன் இதற்குத் திறன் உண்டு.
இஞ்சி சாறு இஞ்சி இருமலைக் குணப்படுத்தும். உடல் எடையைக் குறைக்கும். இன்னும் ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டது தான் இஞ்சி. இந்த இஞ்சியுடன் தேனைக் கலந்து சாப்பிட்டால், இன்னும்அதிக மருத்துவ பலன்கள் உண்டு. தீராத இருமலையும் ஆஸ்துமாவையும் கட்டுப்படுத்தும். நம்முடைய அனைத்து உடல் பிரச்சினைகளுக்கும் காரணமாக இருக்கிற வாதம், பித்தம், கபம் ஆகியவற்றில் பித்தத்தைத் தீர்க்கும் ஆற்றல் இந்த இஞ்சிச் சாறு தேன் கலவைக்கு உண்டு.
கேரட் சாறு கேரட் சாறு ஏற்கனவே நல்ல இனிப்புச் சுவையுடன் தான் இருக்கும். அதனால் இதற்குச் சர்க்கரையே தேவை இல்லை தான். ஆனாலும்கூட, கேரட் ஜூஸில் சிறிதளவு தேன் கலந்து, குடித்து வந்தால், ரத்த சோகை பிரச்னை தீரும்
வெந்நீர் வெந்நீருடன் சிறிதளவு தேன் குடித்து வந்தால் உடலில் தேங்கியுள்ள அதிகப்படியான கொழுப்புகள் அனைத்தும் கரையும். அதிலும் குறிப்பாக, இதை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நல்ல பலன்களை வேகமாகப் பெற முடியும்.
கட்டிகள் உடலில், அங்கங்கே சருமத்தில் உண்டாகும் கட்டிகளையும் வீக்கங்களையும் குறைக்க தேன் மிகவும் பயன்படுகிறது. அதிலும் சிறிதளவு சுண்ணாம்புடன் தேன் கலந்து கட்டிகளிலும் வீக்கங்களிலும் தடவ, விரைவில் குணமடையும்.