31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கிய உணவு

இரத்த சோகை வராமல் தடுக்கும் கறிவேப்பிலை இட்லி பொடி!

நம் ரத்தத்தில் இருக்கும் சிவப்பு அணுக்களில் ஏற்படும் குறைபாடுகளையே இரத்த சோகை (Anemia) என்கிறோம்.

குறிப்பாக ஆண்களை விட பெண்களுக்கே இரத்த சோகை வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கின்றது.

இதனால் பெண்களுக்கு பலவிதமான உடல் நல கோளாறுகளை ஏற்படுத்தும் இந்த இரத்த சோகை மூச்சிரைத்தல், படபடப்பு, உடல் சோர்வுடன் மாதவிலக்குப் பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.

இதனை இயற்கைமுறையில் தடுக்க கறிவேப்பிலை பெரிதும் உதவுகின்றது. அந்தவகையில் இரத்த சோகை வராமல் தடுக்கும் கறிவேப்பிலை இட்லி பொடி எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

மிளகு – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்
புளி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி விதை – 1 டீஸ்பூன்

செய்முறை

வாணலியை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் விட்டு காயவைக்க வேண்டும். பிறகு அதில் மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, உப்பு, புளி, கொத்தமல்லி விதை போட்டு நன்கு வதக்கிக்கொள்ள வேண்டும்.

பிறகு அடுப்பினை அணைத்து விட்டு அந்த சூட்டிலேயே கறிவேப்பிலையை வாணலியில் போட்டு லேசாகப் பிரட்டி விடவேண்டும்.

அத்துடன் பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்கு பொடியாக அரைத்து கொள்ள வேண்டும்.

இப்போது சூப்பரான கறிவேப்பிலை இட்லி பொடி ரெடி. இதை காற்று புகாத கண்ணாடி டப்பாவில் போட்டு வைத்து 1 மாதம் வரை பயன்படுத்தலாம்.

Related posts

சிக்கனை பற்றிய திடுக்கிட வைக்கும் 5 உண்மைகள்!அப்ப இத படிங்க!

nathan

புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்தும் காரட் …!

nathan

உயிரை பறிக்கும் விஷமாக மாறும் பழங்கள்… தெரிந்துகொள்வோமா?

nathan

மாதவிடாய் காலத்தில் இந்த உணவுகளையெல்லாம் நீங்க தள்ளி வச்சுடுங்க!!

nathan

மிளகு தூளுடன் சிறிதளவு தேன் கலந்து சாப்பிடுங்க:சூப்பர் டிப்ஸ்

nathan

கொழுப்பு குறைவாக உள்ள புடலங்காய்: கண்டிப்பாக சாப்பிடுங்கள்

nathan

தினமும் முட்டை சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?

nathan

உடல் பருமனை குறைக்க உதவும் தக்காளி

nathan

நீர்மோர் (Buttermilk)

nathan