37.5 C
Chennai
Saturday, Jun 1, 2024
625.500.560.350.160.300.0530
ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க…யாரெல்லாம் மாம்பழம் சாப்பிடக்கூடாது? மீறி அதிகம் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

மாம்பழத்தைப் பார்த்தாலே பலருக்கும் வாயில் இருந்து எச்சில் ஊறும். பழங்களின் ராஜா தான் மாம்பழம்.

இந்த மாம்பழம் கோடையில் அதிகம் விலை மலிவில் கிடைக்கும். மேலும் மாம்பழம் பலரும் விரும்பி சாப்பிடும் ஒன்றும் கூட.

மாம்பழத்தில் பல்வேறு வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளது.

குறிப்பாக இதில் உள்ள வைட்டமின் சி நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும். அதோடு இன்னும் பல்வேறு நன்மைகளையும் மாம்பழம் வாரி வழங்கும்.

எனினும், அளவுக்கு அதிகமாக எதை சாப்பிட்டாலும் பிரச்சனைதான். அதற்கு மாம்பழமும் விதி விலக்கல்ல. அந்த வகையில், மாம்பழத்தை அதிகம் சாப்பிட்டால் என்ன நடக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

எடை அதிகரிக்கும்

நன்கு கனிந்த ஒரு மாம்பழத்தில் சுமார் 135 கலோரிகள் உள்ளது.

ஆகவே மாம்பழத்தை அதிகம் சாப்பிட்டால், அது உடலில் கலோரிகளின் அளவை அதிகரித்து, உடல் எடையை அதிகரிக்கும். அதேப்போல் மாம்பழம் சாப்பிடும் நேரமும் முக்கியமானது.

ஒருவர் உடற்பயிற்சி செய்வதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன்பே சாப்பிட்டால், உடற்பயிற்சி செய்வதற்கு தேவையான ஆற்றல் கிடைக்கும்.

இரத்த சர்க்கரை அளவு

மாம்பழத்தில் ஃபுருக்டோஸ் அளவு அதிகமாக உள்ளது. அது தான் மாம்பழத்திற்கு இனிப்புச் சுவையைத் தருகிறது.

மாம்பழத்தை அதிகமாக சாப்பிட்டால், அது இரத்த சர்க்கரை அளவை அதிகரித்து, சர்க்கரை நோய் வர வழிவகுத்துவிடும்

இரைப்பை குடல் பிரச்சனைகள்

பழுக்காத மாம்பழங்களை சாப்பிடும் போது, அது இரைப்பை குடல் பிரச்சனைகளான செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆகவே மாங்காயை அதிகம் சாப்பிடாதீர்கள்.625.500.560.350.160.300.0530

தொண்டையில் அரிப்பு அல்லது எரிச்சல்

நன்கு கனிந்த மாம்பழங்களை ஒருவர் அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது, அது தொண்டையில் அரிப்பு அல்லது எரிச்சலை உண்டாக்கும். முக்கியமாக மாம்பழம் சாப்பிட பின் குளிர்ந்த நீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

வாய்ப் புண்

ஒரே நேரத்தில் மாம்பழத்தை அதிகமாக சாப்பிட்டால், அது வாயைச் சுற்றி, உதடு மற்றும் நாக்கு நுனிகளில் புண் அல்லது வெடிப்புக்களை உண்டாக்கும்.

சாப்பிடக்கூடாதவர்கள்
  • ஆர்த்ரிடிஸ், சைனஸ் பிரச்சினை உள்ளவர்கள் ஒரு நாளைக்கு ஒரு சிறிய அளவிலான மாம்பழத்திற்கு மேல் சாப்பிடக்கூடாது.
  • அதிலும் மாம்பழம் மட்டுமின்றி, மாங்காயையும் தான் அளவாக சாப்பிட வேண்டும்.
  • இல்லாவிட்டால் நிலைமை மோசமாகும்.

Related posts

உங்களுக்கு தெரியுமா இந்த உணவுகளை ஒன்றாக சேர்த்து சாப்பிடுவதால், உங்கள் உடலில் விஷத்தன்மை அதிகரிக்கும்!

nathan

உங்களுக்கு தெரியுமா பச்சை மிளகாயின் அற்புத நன்மைகள்

nathan

சூப்பரான எள்ளுப்பொடி

nathan

கருப்பட்டியின் மகத்தான பயன் பருவமடைந்த பெண்களுக்கு முக்கியமான இடம் பிடித்த ஒன்று…

nathan

தெரிந்துகொள்வோமா? பீட்ரூட்டின் சில மருத்துவப் பயன்

nathan

தெரிஞ்சிக்கங்க…அன்றாட உணவில் தக்காளியை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

மாம்பழத்தை சாப்பிடாதீங்க.. இல்லன்னா ரொம்ப கஷ்டப்படுவீங்க..

nathan

உங்க வீட்டில் இந்த உணவுகள் மிச்சமாயிடுச்சா? கண்டிப்பாக சாப்பிடாதீங்க, விளைவு பயங்கரமா இருக்கும்.

nathan

பாலை விட அதிக புரதச்சத்து நிறைந்த உருளைக்கிழங்கு

nathan