31.4 C
Chennai
Saturday, Jun 1, 2024
cook
ஆரோக்கியம்ஆரோக்கிய உணவுஆரோக்கியம் குறிப்புகள்

சமையலில் ஏற்படும் சில தவறுகள்! ஏற்படும் பெரும் பாதிப்புக்கள்!

இயற்கை உணவுகள் அனைத்துமே எப்பொழுதும் நமக்கு ஆரோக்கியத்தை வழங்குபவைதான். ஆனால் நாம் சமைக்கும் போது செய்யும் சில தவறுகளால் காய்கறிகளில் உள்ள பல முக்கியமான ஊட்டச்சத்துக்களை இழக்கிறோம். உணவை அதிக வெப்பத்தில் சமைப்பது, அதிக நீர் ஊற்றுவது, தவறான பொருட்களை சேர்ப்பது என சமைக்கும் போது நாம் செய்யும் தவறுகள் ஏராளம்.

இதனால்தான் பெரும்பாலான காய்கறிகளை சமைக்காமல் பச்சையாக சாப்பிட மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

இருப்பினும் சில காய்கறிகளை சமைக்காமல் சாப்பிட முடியாது அந்த சூழ்நிலைகளில் ஆரோக்கியமான சமைக்கும் முறையை கையாள வேண்டும்.

இந்த பதிவில் சமைக்கும்போது உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் வெளியேறாமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

cook

கழுவும் முறை

காய்கறிகளை வெட்டி விட்டு அதன்பின் கழுவும் முறையை பலரும் பின்பற்றுகிறார்கள். இது மிகவும் தவறாகும். எப்போதும் உணவை கழுவி விட்டு அதன்பின் நறுக்குவதை பழக்கமாக்கி கொள்ளுங்கள்.

ஏனெனில் நறுக்குவிட்டு கழுவும் போது நாம் பல ஊட்டச்சத்துக்களை இழக்கிறோம்.

சிறியதாக நறுக்காதீர்கள்

காய்களை எப்போதும் மிகச்சிறிய துண்டாகி நறுக்காதீர்கள். ஏனெனில் சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கும்போது காற்றுடன் அவை வினைபுரிவதால் நாம் ஊட்டச்சத்துக்களை இழக்கிறோம்.

எனவே எப்போதும் காய்கறிகளை பெரிய துண்டாக நறுக்கி சமையுங்கள்.

நீரின் அளவு

உணவை எப்பொழுதும் குறைவான தண்ணீரில் சமைக்க பழகுங்கள். ஏனெனில் அதிக தண்ணீரில் சமைப்பது பல ஊட்டச்சத்துக்களை சிதைக்கிறது.

எனவே குறைந்த நீரில் குறைவான வெப்பத்தில் சமைப்பது நல்லது.

உணவை சூடு பண்ணுவது

உணவை சமைக்கும் போது அதிக வெப்பத்தில் சமைப்பது எப்படி தவறானதோ அதேபோல அந்த உணவை மீண்டும் சூடுப்படுத்துவது அதிலுள்ள ஊட்டச்சத்துக்களை மேலும் சிதைக்கும்.

உடனடியாக சமைப்பது

காய்கறிகள் வெட்டிய உடனேயே சமைக்க தொடங்கி விடுங்கள், ஏனெனில் நீங்கள் தாமதமாக சமைக்கும் போது அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் காற்றில் வினைபுரிந்து அதனை இழக்க நேரிடும்.

மீதமான தண்ணீர்

காய்கறிகள் மற்றும் அரிசியை சமைத்த பின்னர் மீதமிருக்கும் தண்ணீரை வீணாக்காதீர்கள். ஏனெனில் இந்த தண்ணீரில் நிறைய ஊட்டச்சத்துக்கள் இருக்கும்.

இந்த தண்ணீரை கொண்டு உணவை சமைப்பது உணவின் சுவையையும், ஊட்டச்சத்தையும் அதிகரிக்கும்.

வேர் காய்கறிகள்

பூமிக்குள் இருந்து கிடைக்கும் காய்கறிகளான உருளைக்கிழங்கு, கேரட், இஞ்சி போன்ற காய்கறிகளை எப்போதும் தோலுடன்தான் வேகவைக்க வேண்டும்

. ஏனெனில் காய்கறிகளை தோலுடன் வேகவைக்கும் போது அதிலுள்ள ஊட்டச்சத்துளை நீங்கள் இழக்க நேரிடாது.

பேக்கிங் சோடா

காய்கறிகளை சமைக்கும் போது அதில் பேக்கிங் சோடாவை சேர்க்காதீர்கள். இது காய்கறிகளின் நிறத்தை தக்கவைத்து கொள்ள உதவும், மேலும் சமையலின் செயல்முறை வேகத்தையும் அதிகரிக்கும்.

ஆனால் இது காய்கறிகளில் உள்ள வைட்டமின் சி-யை சிதைக்கும்.

சமைக்கும் நேரம்

நீண்ட நேரம் சமைக்கும் போதும், அதிக நேரம் சமைக்கும் போதும் காய்கறிகளில் உள்ள ஊட்டச்சத்துக்களை சிதைக்கிறது.

ஏனெனில் ஊட்டச்சத்துக்கள் மிகவும் மென்மையானவை, வெப்பம் அவற்றை எளிதில் அழித்துவிடும்.

Related posts

எது நல்ல உணவு? நமக்கான ஃபுட் ரூல்ஸ்!

nathan

காலையில் வெறும் வயிற்றில் பப்பாளி பழம் சாப்பிடலாமா?

nathan

வேர்கடலை சாட்

nathan

தமிழ் நடிகர் நடிகைகளின் ஃபிட்னஸ் ரகசியம்!!!

nathan

ஒத்தைப்பல் பூண்டுல அப்படி என்ன அற்புதம் இருக்குன்னு தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் அப்போ கட்டாயம் இத படிங்க!….

sangika

அடேங்கப்பா! எலுமிச்சை பழத்தில் இவ்வளவு நன்மைகளா ??

nathan

வீட்டில் கற்றாழை ஜெல் தயாரிப்பது எப்படி?

nathan

உங்களுக்கு தெரியுமா இவர்கள் வாழைப்பழத்தை தொட்டு கூட பார்க்க கூடாதாம்!

nathan