pitzza
ஆரோக்கிய உணவு

சுவையான வீட்டிலேயே செய்யக்கூடிய பன்னீர் பீட்சா செய்முறை!

தேவையான பொருட்கள்
பீட்சா பேஸ் – ஒன்று
பன்னீர் – ஒரு பாக்கெட்
சீஸ் – 50 கிராம்
வெண்ணெய் – 2 மேசைக்கரண்டி
வெங்காயம் – 2
தக்காளி – ஒன்று
தக்காளி சாஸ் – 2 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
மிளகுத் தூள் – தேவையான அளவு
காய்ந்த மிளகாய் – 4
செய்முறை
வெங்காயம் தக்காளியைப் பொடியாக நறுக்கி கொள்ளவும். சீஸை நன்கு துருவிக் கொள்ளவும். (விரும்பினால் கடைகளில் கிடைக்கும் சீஸ் ஸ்லைஸைப் பயன்படுத்தலாம். இன்னும் நன்றாக இருக்கும்). மற்ற தேவையான பொருட்களையும் எடுத்து வைத்துக் கொள்ளவும். பனீரைச் சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

காய்ந்த மிளகாயிலுள்ள விதைகளை தனியாக எடுத்துக் கொண்டு மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும்.

அடுப்பில் பேனை வைத்து வெண்ணெய் ஊற்றி, அதில் பன்னீரைப் போட்டு லேசாகப் பொரித்தெடுக்கவும்.

பீட்சா பேஸில் வெண்ணெயைத் தடவிக் கொள்ளவும்.

அதற்கு மேலே தக்காளி சாஸை நன்றாகத் தடவவும்.

பிறகு நறுக்கிய வெங்காயத்தை பரவலாக வைக்கவும்.

வெங்காயத்திற்கு மேல் தக்காளியைப் பரவலாக வைக்கவும்.

அதன் பிறகு பொரித்த பன்னீரைப் பரவலாக வைத்து, அதன் மேல் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத் தூளைத் தூவி, அரைத்து வைத்துள்ள மிளகாயைத் தூவவும்.

அதன் மீது சீஸைத் தூவவும்.

கடைசியாக மைக்ரோவேவ் அவனில் 200 டிகிரியில் 15 நிமிடங்கள் வைத்தெடுக்கவும்..

சுடச்சுட பன்னீர் பீட்சா ரெடி.pitzza

Related posts

சூப்பரான எள்ளுப்பொடி

nathan

வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை மட்டும் வளராதுங்க.!அதுவும் வளரும்…

nathan

புளிப்பாக சாப்பிடலாமா?

nathan

உங்களுக்கு தெரியுமா உலர்திராட்சையால் உடலுக்கு ஏற்படும் உற்சாகமான நன்மைகள்.!!

nathan

சத்து மற்றும் சுவையான பேரீச்சம் பழம் பாயாசம் செய்முறை

nathan

சுவையான மராத்தி ஸ்டைல் இறால் குழம்பு

nathan

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு

nathan

நல்ல உடல் பலத்தோடு இருக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!

nathan

சாப்டுற எந்த உணவு கம்மியான கொலஸ்ட்ரால் கொண்டதுன்னு உங்களுக்கு தெரியுமா?

nathan