KzDMQZg
ஆரோக்கிய உணவு

தினமும் உணவில் பெருங்காயம் சேர்த்துக்கோங்க

பெண்களுக்குப் பெருங்காயம் ஒரு சிறந்த மருந்து. ஆனால், ‘கர்ப்பிணிகள் அதிகம்’ சேர்க்கக் கூடாது. மாதவிடாய் சரியாக வராதவர்கள், அதிக ரத்தப்போக்கு இல்லாமல், லேசாக வந்து செல்லும் பெண்களுக்குக் காயம் அதனைச் சீர்படுத்தும். மாதவிடாய் தள்ளி தள்ளி வரும், சினைப்பை நீர்க்கட்டி (பாலி சிஸ்டிக் ஓவரி) உள்ள பெண்களும் பெருங்காயத்தை உணவில் அவ்வப்போது சேர்த்துக்கொண்டே வருவது நல்லது. கருத்தரிக்காமல் குறித்த நாளில் மாதவிடாய் வராமல், வருந்தும் பெண்களுக்கு, வாலேந்திர போளம், பெருங்காயம், மிளகு சேர்த்து அரைத்து, இரண்டு மிளகு அளவு உருட்டிக் கொடுக்க மாதவிடாய் வந்து சூதகக் கட்டு அகலும்.

குழந்தை பிறந்த பின் கர்ப்பப்பையில் இருந்து வெளிப்படும் ஒருவகையான திரவம், லோசியா (Lochia) முழுமையாய் வெளியேற, காயத்தைப் பொரித்து, வெள்ளைப்பூண்டு, பனை வெல்லம் சேர்த்து, பிரசவித்த முதல் ஐந்து நாட்கள் காலையில் கொடுப்பது நல்லது. இந்த மூலிகை, ஆண்களின் காம இச்சையையும் அதிகரிக்கக்கூடியது என்கிறது சித்த மருத்துவம்.

அஜீரணம் போக்கும்

அஜீரணத்துக்குப் பெருங்காயம் மிக முக்கியமான மருந்து. புலால் சமைத்தாலும் சரி, வாயு தரக்கூடிய வாழை, கொண்டைக்கடலை, பட்டாணி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளைச் சமைக்கும்போது, துளிப் பெருங்காயம் அந்த உணவில் போட மறக்கக் கூடாது. சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், சீரகம், கறிவேப்பிலை, இந்துப்பு ஆகியவற்றை தலா 10 கிராம் எடுத்து, பெருங்காயம் இரண்டரை கிராம் (பிற பொருள் அளவின் கால் பங்கு மட்டும்) எடுத்துப் பொடித்துவைத்து, சோற்றில் போட்டுப் பிசைந்து, முதல் உருண்டையைச் சாப்பிட்டுப் பின் சாப்பாடு சாப்பிட்டால், அஜீரணம், குடல் புண், (Gastric oesophagal Reflex Disease-GERD), முதலான வாயு நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாகும்.

நெஞ்சு எலும்பின் மையப்பகுதியிலும், அதற்கு நேர் பின் பகுதியிலும் வாயு வலி வந்து, சில நேரங்களில் இதய வலியோ என பயமுறுத்தும். அதற்கு, பெருங்காயம் ஒரு பங்கு, உப்பு இரண்டு பங்கு, திப்பிலி நான்கு பங்கு, எடுத்து செம்முள்ளிக் கீரையின் சாற்றில் அரைத்து மாத்திரையாக உருட்டிக்கொண்டு, காலையும் மாலையும் ஒன்றிரண்டு மாத்திரையாக ஏழு நாட்கள் சாப்பிட, வாயுக்குத்து முழுமையாய் நீங்கும்.

அதற்கு முன்னர் வந்திருப்பது, ஜீரணம் தொடர்பான வலியா, அல்லது ஒரு வகையான நெஞ்சு வலியா (Unstable angina) என உறுதிப்படுத்துவது மிக அவசியம். இரிடபிள் பவுல் சிண்ட்ரோம் எனும் சாப்பிட்டவுடன் வரும் கழிச்சல், அடிக்கடி, நீர் மலமாய்ப் போகும் குடல் அழற்சி நோய்களிலும் பயனளிக்கக்கூடியது. குழந்தைகளுக்கு கொஞ்சம் ஓம நீரில், துளிக் காயப் பொடி கலந்துகொடுக்க, மாந்தக் கழிச்சலை நீக்கி, சரியான பசியைக் கொடுக்கும்.

ஜீரணம் மட்டுமல்ல. புற்றுநோயிலும் கூட இந்த தாவர ரெசின் பயனளிப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. நுரையீரல், மார்பகம், குடல் புற்றுநோய் செல் வளர்ச்சியை 50 சதவிகிதத்துக்கும் மேலாகக் கட்டுப்படுத்துவதை ஆரம்பக் கட்ட ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.KzDMQZg

Related posts

உடல் பருமனை குறைக்க உதவும் தக்காளி

nathan

கமலா ஆரஞ்சு பழத்தில் எத்தனை சத்துக்கள் உள்ளன தெரியுமா!

nathan

சூப்பர் டிப்ஸ்! இடுப்பு எலும்பு வலுப்பெற உளுந்துக் களி

nathan

நடு ராத்திரியில பசிக்குதா? அப்ப கண்டதை சாப்பிடாம.. ஆரோக்கியமான இத சாப்பிடுங்க…

nathan

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வைரஸ் தொற்றைத் தடுக்கலாம்!

nathan

இளநீரில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு குடித்தால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா ?

nathan

தெரிஞ்சிக்கங்க…இரண்டு கிராம்பை வாயில் போட்டு மென்று சாப்பிடுங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த இரண்டு பழங்களை மட்டும் சேர்த்து சாப்பிடா மரணம் நிச்சயம்!

nathan

அரிசி தரும் அரிதான நன்மைகள்

nathan